(செ.தேன்மொழி)

தம்புள்ளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பகஹவெவ ராகுல தேரரிடம் கப்பம் கோரி மிரட்டியதாக கூறப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி தம்புள்ளை விகாராதிபதியிடம் தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டுள்ள இவர்கள், தாம் ஜமஆத் அமைப்ப சேர்ந்தவர்கள் எனவும் தேரரை கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மிரட்டியுள்ளனர். பின் கொலைச் செய்யாமல் இருப்பதற்காக 10 கோடி ரூபாய் பணத்தை கப்பமாக தருமாறும் கோரியுள்ளனர்.  

இது தொடர்பில் தேரர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையிலே  சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.