சவூதி அரே­பி­யாவை மையப்­ப­டுத்­தி­யி­ருக்கும் வஹாப் சிந்­த­னையும், தௌஹீத் ஜமாஅத் சிந்­த­னையும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­தினை வலுப்­ப­டுத்தி தீவி­ர­வா­தத்தின் தோற்­று­வா­யாக இருக்­கின்­றது என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

இரண்­டுமே வெவ்வேறாக இருந்­தாலும் ஏகத்­துவ இறை சிந்­த­னை­யையே கொண்­டி­ருக்­கின்­றது என்று தமி­ழக இஸ்­லா­மிய மார்க்க அறி­ஞரும் தௌஹீத் ஜமாத் அமைப்பின் நிறு­வு­னரும்  தேசிய தௌஹீத் கூட்­ட­மைப்பின் (என்.ரி.எப்) தலை­வ­ரு­மான பி.ஜே எனப்­படும் பி.ஜைனுல் ஆப்தீன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியின் போது தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­ வ­டிவம் வரு­மாறு, 

கேள்வி:-தமிழ்­நாட்டு தௌஹீத் ஜமா­அத்­தி­லி­ருந்து ஏன் வெளி­யேற்­றப்­பட்­டீர்கள்?

பதில்:- அர­சி­யலில் ஈடு­ப­டு­வ­தில்லை என்ற அடிப்­படைக் கொள்­கை­யுடன் தான் தமிழ்­நாடு முஸ்லிம் முன்­னேற்­றக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்­டது. எனினும், அக்­க­ழ­கத்­த­வர்கள் அர­சி­யலில் ஈடு­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்­த­மையால் அதி­லி­ருந்து விலகி தமிழ்­நாட்டு தௌஹீத் ஜமா­அத்தை உரு­வாக்­கினோம். இந்த அமைப்பு எழுச்­சி­யாக செயற்­பட ஆரம்­பித்த பின்னர் ஓய்­வு­நி­லையில் இருக்கும் தீர்­மா­னத்­தினை எடுத்து அனைத்து பத­வி­க­ளி­லி­ருந்தும் இரா­ஜி­னாமா செய்­தி­ருந்தேன். இந்­நி­லையில் தான் ஜமா­அத்தின் புதிய நிரு­வா­கத்­தினர் திட்­ட­மிட்டு என்­மீது போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி தாங்கள் வெளி­யேற்­றி­னார்கள். 

கேள்வி:- தற்­போது புதிய அமைப்­பொன்றை உரு­வாக்­கி­யதன் நோக்கம் என்ன?  

பதில்:- தேசிய தௌஹீத் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் புதிய அமைப்­பொன்றை உரு­வாக்­கி­யி­ருக்­கின்றோம். ஆறு மாதங்­க­ளா­கின்ற நிலையில் 106கிளை­க­ளுடன் செயற்­பட்டு வரு­கின்றோம். ஏகத்­து­வத்­தையும், சமு­தாய சீர்­தி­ருத்­தத்­தி­னையும் அடிப்­ப­டை­யாக வைத்தே செயற்­ப­டு­கின்றோம். 

கேள்வி:- தௌஹீத் ஜமாஅத் அமைப்­புக்கள் இஸ்­லா­மிய அடிப்­படை சிந்­த­னை­களை அதி­க­ரிக்கச் செய்­கின்­றன என்­பது பற்றி?

பதில்:- தௌஹீத் என்­பது இறை­வனின் ஏகத்­து­வத்­தையே வலி­யு­றுத்திக் கூறு­வ­தாக உள்­ளது. தௌஹீத் அமைப்­புக்கள் தீவி­ர­வா­தத்­தினை ஏற்­றுக்­கொள்­ள ­வில்லை. உலகில் காணப்­ப­டு­கின்ற எந்­த­வொரு தௌஹீத் அமைப்பும் தீவி­ர­வா­தத்­தினை ஏற்றுக் கொள்­வ­தில்லை. இலங்­கையின் காத்­தான்­கு­டியில் தாருல் அஸர் என்ற அமைப்பில் இருந்த சஹ்ரான் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்­பினை ஆரம்­பித்து அதன் பின்னர் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலை மேற்­கொண்டார். உல­கத்­தி­லேயே தௌஹீத்தின் பெயரால் தீவி­ர­வாதத் தாக்­குதல் செய்த ஒரே­யொரு நபர் இவர் தான்.  அதன் பின்­னரே தௌஹீத் அமைப்­புக்கள் மீது இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்கள் எழு­கின்­றன. தாக்­குதல் நடத்­து­வ­தற்கு  பல காலம் முதலே சஹ்ரான் தான் ஆரம்­பித்த அமைப்பில் இருந்தே நீக்­கப்­பட்­டி­ருந்தார் என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். 

கேள்வி:- தௌஹீத் கட்­ட­மைப்­பினை இலங்­கை­யிலும் நீங்­களே நிறு­வி­யி­ருந்த நிலையில் சஹ்ரான் என்­ப­வரை நீங்கள் அறிந்­தி­ருந்­தீர்­களா? 

பதில்:- தேசிய தௌஹீம் ஜமாஅத் அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­மையை இலங்கை சகோ­த­ரர்கள் ஊடாக அறிந்­தி­ருந்தோம். பின்­ன­ரான காலத்தில் சஹ்ரான் என்­பவர் தௌஹீத் ஜமாஅத் கட்­ட­மைப்­புக்கள் சம்­பந்­த­மா­கவும் இஸ்­லா­மிய மார்க்­கத்தில் குறிப்­பிட்ட சில விட­யங்கள் சம்­பந்­த­மா­கவும் மாறு­பட்ட கருத்­துக்­களை சமூக வலைத்­த­ளங்­களில் பிர­சாரம் செய்ய ஆரம்­பித்தார். இச்­ச­ம­யத்தில் அவ­ரு­டைய கருத்­துக்கள் தவ­றா­னவை என்­பதை கூறி­ய­தோடு தவ­றான வழி­காட்­டு­தல்­களை செய்­யா­தீர்கள் என்று சமூக வலைத்­தளம் ஊடா­கவே பதி­ல­ளிப்­புக்­களை செய்ய ஆரம்­பித்­தி­ருந்தோம். இதனால் எமக்கும் அவர்­க­ளுக்கும் இடையில் சமூ­க­வ­லைத்­த­ளத்தில் முரண்­பா­டு­களே நீடித்து வந்­தன. இத­னை­வி­டவும் நேர­டி­யாக அவ­ருடன் எந்த பழக்­கத்­தி­னையும் கொண்­டி­ருக்­க­வில்லை. தமி­ழ­கத்தில் உள்ள எந்­த­வொரு தௌஹீத் அமைப்­புக்­க­ளு­டனும் அவர் தொடர்­பு­பட்­டி­ருக்­க ­வில்லை.

கேள்வி:- இலங்­கைக்கு இறு­தி­யாக வந்­தி­ருந்­த­போது குழப்ப நிலை­மைகள் ஏற்­பட்­ட­மைக்­கான காரணம் என்ன? 

பதில்:- இலங்­கைக்கு நான் ஏழு தட­வைகள் வந்­தி­ருக்­கின்றேன். முன்­ன­தாக ஆறு­த­ட­வைகள் வரு­கை­தந்து ஸ்ரீலங்கா தௌஹீத் கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யுள்ளேன்.  அதன்­போது எவ்­வி­த­மான பிரச்­சி­னை­களும் இருக்­க ­வில்லை. இறு­தி­யாக வந்த சந்­தர்ப்­பத்தில் தௌஹீத் சிந்­தனை எழுச்­சி­யுற்­றி­ருந்­தது. அக்­கு­றணை, புத்­தளம், காத்­தான்­குடி உள்­ளிட்ட எட்டு இடங்­களில் மாநா­டு­களை நடத்­தினோம். ஆயி­ரக்­க­ணக்­கானோர் பங்­கேற்­றார்கள். 

இறு­தி­யாக கொழும்பில் இஸ்­லா­மிய சமயம் குறித்த சந்­தே­கங்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் கேள்­வி­பதில் நிகழ்­வொன்று ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. 

அச்­ச­ம­யத்தில், தௌஹீத் கொள்­கைக்கு எதி­ரா­ன­வ­ராக இருக்கும் அஸாத்­சாலி பிறி­தொரு மார்க்க அறி­ஞ­ருடன் இணைந்து பௌத்­தர்­களை இஸ்­லா­மி­யர்­க­ளாக்­கு­வ­தற்கே  நான் வந்­தி­ருப்­ப­தா­கவும் நிகழ்ச்­சியை தடை­செய்து என்னை நாட்­டை­விட்டு வெளி­யேற்ற வேண்டும் என்றும் முறைப்­பாடு செய்­தி­ருந்தார். 

அஸாத்­சா­லிக்கு இருந்த அர­சியல் செல்­வாக்கு கார­ண­மாக அந்த நிகழ்ச்­சியை இரத்­துச்­செய்து என்­னையும் நாட்­டி­லி­ருந்து கண்­ணி­ய­மான முறை­யிலே வெளி­யேற்­றி­யி­ருந்­தார்கள். 

கேள்வி:- நீங்கள் இலங்­கைக்கு வருகை தந்து ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்­களை சந்­தித்­தி­ருந்த நிலையில் அம்­மக்­க­ளி­டையே வஹாப் சிந்­த­னைகள் இருந்­த­மையை உண­ரக்­கூ­டி­ய­தாக இருந்­ததா?

பதில்:- வஹாப் சிந்­தனை என்ன என்­பதை முதலில் கூற­வேண்­டி­யி­ருக்­கின்­றது.  சவூதி அரே­பி­யாவில் முக­மது பின் அப்துல் வஹாப் என்ற ஒரு மார்க்க அறிஞர் இருந்தார். 

 அவர் தர்கா உள்­ளிட்­ட­வற்­றுக்கு எதி­ராக போராட்­டங்­களை முன்­னெ­டுத்தார். சமு­தாய சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக போரா­டினார். அவ­ரு­டைய கருத்­துக்­களை பின்­பற்றி சமு­தா­யத்­திற்கு கூறு­ப­வர்கள் அனை­வ­ரையும் வஹா­பிகள் என்று அழைப்­ப­தற்கு ஆரம்­பித்­தார்கள். இவ­ரு­டைய கருத்­துக்­களை ஏற்­றுக்­கொண்­ட­வர்­களே சவூதி அர­சாங்­கத்தின் ஆட்­சிப்­பீ­டத்­திலும் அமர்ந்­தார்கள். 

மேலும், இஸ்­லாத்தில் கூறப்­பட்­டுள்­ளதன் பிர­காரம் அவர்­களும் ஏகத்­துவ இறை­வ­ழி­பாடு உள்­ளிட்ட விட­யங்­க­ளையே முன்­வைக்­கின்­றார்கள். நாமும் அத­னைத்தான் முன்­வைக்­கின்றோம். ஆனால் அவர்கள் எமக்கு தலை­மைத்­தாங்­கு­வ­தில்லை. அவர்­க­ளுக்கும் எமக்கும் எவ்­வி­த­மான வலை­ய­மைப்பு ரீதி­யான தொடர்­பு­களும் இல்லை. அத்­துடன் வஹா­பிகள் தீவி­ர­வாத போக்­கு­டை­ய­வர்கள் என்றும் கூற முடி­யாது. காரணம், சவூ­தியில் இந்த சிந்­த­னையே காணப்­ப­டு­கின்­றது. ஆனால் அங்கு எவ்­வி­த­மான தீவி­ர­வாத செயற்­பா­டு­களோ, தாக்­கு­தல்­களோ நடை­பெ­ற­வில்­லையே. எனவே வஹாப் சிந்­த­னையை தீவி­ர­வா­தத்தின் தோற்­றுவாய் என்ற தர்க்­கத்­தினை ஏற்­றுக்­கொள்­ளவே முடி­யாது. 

கேள்வி:- இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் எவ்­வாறு தீவி­ர­வா­த­மாக உரு­வெ­டுக்­கின்­றது?

பதில்:- அர­சியல் பதவி, அதி­கார ஆசை­கொண்ட தரப்­பினர் இஸ்­லா­மிய ஆட்­சி­யு­டைய நாடு­களில் அல்­லது இஸ்­லா­மிய ஆட்­சியை உரு­வாக்­கு­வ­தற்­காக பொது­மக்கள் மத்­தியில் இஸ்­லாத்தில் கூறப்­பட்­டுள்ள போர் தொடர்­பான விட­யப்­ப­ரப்­பினை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­து­கின்­றார்கள். இஸ்­லாத்தில் கூறப்­பட்­டுள்ள ஜிகாத் தொடர்­பான விட­யத்­தினை மையப்­ப­டுத்தி போர் புரி­யலாம். மனி­தர்­களை படு­கொலை செய்ய முடியும் என்ற சிந்­த­னை­களை உரு­வாக்கி கருத்­துக்­களை விதைக்­கின்­றார்கள். 

இஸ்லாம் என்­பது ஆட்சி, அதி­கா­ரத்­தினை பெறு­வ­தற்­காக உரு­வான மத­மொன்று அல்ல. மக்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்தி சிறந்த வாழ்­வி­யலை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவே தோற்றம் பெற்­றது. இந்த நூற்­றாண்­டுக்குள் தான் அர­சி­ய­லுக்கு இஸ்­லாத்­தினை பயன்­ப­டுத்தும் சித்­தாந்தம் விதைக்­கப்­ப­டு­கின்­றது. இந்த சித்­தாந்­தத்தின் தாக்கத்திற்குள் உள்ளாகின்றவர்கள் தான் இரகசிய உறுதிமொழி, ஆயுதம் தரிப்பு, எதிரிகளாக இருக்கின்றவர்களை கொலை செய்தல் உள்ளிட்ட பாதையில் பயணிக்கின்றார்கள். 

கேள்வி:- இலங்கையில் தௌஹீத் கட்டமைப்புக்கள் அவசியமில்லை என்றொரு கருத்து வலுத்துவருகின்றதே?

பதில்:- எப்படி வஹாப் சிந்தனைகளை தவறாக புரிந்து கொண்டு அவை அடிப்படைவாதத்தினை தீவிரவாதத்தினை தூண்டுவதாக கூறுகின்றார்களோ அதுபோன்று தான் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் தௌஹீத் அமைப்புக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் அஸாத்சாலி போன்றவர்கள் தற்போதுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தௌஹீத் அமைப்புக்களை தடைசெய்வதற்கே முனைகின்றார்கள். அத்தகைய நோக்கம் கொண்டவர்கள் கூட நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது. வஹாப், தௌஹீத் சிந்தனைகளில் ஒற்றுமை காணப்படுகின்றபோதும் இரண்டும் தனித்தனியாகவே இருக்கின்றன. இரண்டுமே தீவிரவாதத்திற்கு எதிரானவை என்ற புரிதல் அவசியமாகின்றது.