வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ள சமூர்த்தி நிவாரணப் பயனாளிகளுக்கு உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்விற்கு காலை 9மணியிலிருந்து காத்திருப்பதாகவும் காலை 9.30மணியளவில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு வெளி பிரதேசங்களிலிருந்து பஸ்களில் அழைத்து வரப்பட்ட மக்கள் நிகழ்வுகள் காலை இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 9.30மணியளவில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டு படையினர் இணைந்து பாதுகாப்பினை வழங்கி வருகின்றனர். அழைப்பிதழில் பிற்பகல் 1.30மணிக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பின்னர் மாலை 3.30மணியளவில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக சமூர்த்தித்திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு நேரத்தை மாற்றிக் குறிப்பிட்டுள்ளது நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்பிரதேசங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் நகரசபை மைதானத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதுடன் அலைக்களிக்கப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

பொலிசாரும் படையினரும் நீண்ட நேரமாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.