அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வோர்னர் அடித்த பந்து ஜெய்கிஷன் தலையில் தாக்கியதனால் அவர் நிலைகுலைந்து மைதானத்தில் வீழ்ந்தார். 

இந்தியவுடனான உலகக் கிண்ண ஒருநாள் போட்டிக்கு தயாராகுவதற்காக அவுதிரேலிய கிரிக்கெட் அணியினர் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது டேவிட் வோர்னர் அடித்த ஒரு பந்து வலைப்பயிற்சி பந்து வீச்சாளர் ஜெய்கிஷன் தலையில் தாக்கியது. இதனால் அவர் நிலைகுலைந்து மைதானத்தில் வீழ்ந்தார்.

15 நிமிடங்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான டேவிட் வோர்னர் சிறிது நேரம் பயிற்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். அடிபட்ட வீரருக்கு பயப்படும் வகையில் காயம் எதுவும் இல்லை என்று அறிந்த பின்பே வோர்னர் நிம்மதி பெருமூச்சு விட்டார். பின்னர் அவர் வலைப்பயிற்சியில் மீண்டும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.