ஏமன் நாட்டின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தாலியா மாகாணத்தில் அசாரிக் மாவட்டத்தில், மசூதியொன்றில் நேற்று முன்தினம் தொழுகையிலீடுப்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.  

ஏமனில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தாலியா மாகாணத்தில் அசாரிக் மாவட்டத்தில், மசூதியொன்றில் தொழுகை இடம்பெற்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் தானியங்கி துப்பாக்கிகளுடன் ஒரு வாகனத்தில் வந்து இறங்கியுள்ளனர். இறங்கிய வேகத்தில், மசூதியில் நுழைந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள். இதில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், அங்கிருந்தவர்கள் பதறியடித்து நாலாபுறமும் ஓடியுள்ளனர். இதற்கிடையே தாக்குதல்களை நடத்தியவர்களும், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். அத்துடன், அவர்கள் தங்களுடன் 3 பேரை கடத்தியும் சென்றுள்ளனர். 

மேலும், தாக்குதலின்போது ஸ்தலத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர்  படுகாயமடைந்த நிலையில் கிடந்தோரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து கண்டறியும் தீவிர பணியை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.