இங்கிலாந்து அணி வீரர்கள் தொடர்ச்சியான அதிரடி ஆட்டம் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஓட்டங்களை 386 குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான போட்டி தலைமையிலான இங்கிலாந்து மற்றும் மோத்ரசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே கார்டீப்பில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களடுத்தடுப்பை தேர்வுசெய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிளயது.

அந்த அணியின் ஆரம்ப வீரர்களும் அதற்கடுத்தடுத்து களமிறங்கிய ஏனைய வீரர்களும் தங்களது பங்களிப்பினை சிறந்த முறையில் வழங்க இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 386 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து அணிசார்பில் ஜோசன் ரோய் 121 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டம் 14 நான்கு ஓட்டம் அடங்கலாக 153 ஓட்டத்தையும், ஜோனி பெயர்ஸ்டோ 51 ஓட்டத்தையும், ரூட் 21 ஓட்டத்தையும், பட்டலர் 64 ஓட்டத்தையும், மோர்கன் 35 ஓட்டத்தையும், பென் ஸ்டோக்ஸ் 6 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், ஆடுகளத்தில் கிறிஸ் வோக்ஸ் 18 ஓட்டத்துடனும், பிளங்கட் 27 ஓட்டத்துடனும் ஆட்மிழக்காதிருந்தனர்.  

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மொஹமட் சைபுடின், மெஹீடி ஹசன் ஆகியோர் தலா  2 விக்கெட்டுக்களையும் மொஷ்ரஃபி மோத்ரசா மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.  

photo credit : ‍ ICC