150 வருட யூபிலி விழா

By Daya

08 Jun, 2019 | 04:13 PM
image

மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையான மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வது ஆண்டு பூர்த்தி யூபிலியை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி சமய சமூக கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 10 திகதி தொடங்கி அடுத்தவருடம் ஜீன் 10 ஆம் திகதிவரை யூபிலி ஆண்டாக பிரகடனப்படுத்தி ஒரு வருடம் பல்வேறுபட்ட கலை கலாச்சார பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்

குறிப்பாக விசேட இரத்ததான நிகழ்வு, பொது சிரமதான பணிகள் முதியோர் இல்ல தரிசிப்பு மாபெரும் நடைபவணி , ஆசிரியர் உபசரிப்பு  நிகழ்வு மாணவர்களுக்கான பரிசலிப்பு நிகழ்வு என பல்வேறு பட்ட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதே நேரத்தில் இறுதி நாள் நிகழ்வில் விசேட கலை நிகழ்வுகள் உட்பட பரிசலிப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே குறித்த நிகழ்வுகளுக்கு பாடசாலை பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என அனைவரும் கலந்து கொண்டு 150 வருட நிறைவு நிகழ்வை சிறப்பிப்பதுடன் ஒத்துழைப்பும் வழங்குமாறும்  அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்கிலிய மன்னனின் குடும்பப்படம் திரை நீக்கம்

2022-11-28 17:15:46
news-image

யாழில் இடம்பெற்ற 3 ஆவது முதலீட்டாளர்...

2022-11-28 17:09:28
news-image

சாய்ந்தமருதில் வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும்...

2022-11-28 15:09:09
news-image

யாழ் பல்கலையில் கருவுறுதல் விழிப்புணர்வு தினம்...

2022-11-28 15:10:27
news-image

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு...

2022-11-28 13:57:09
news-image

மலைக இலக்கியம் தொடர்பான இரு நூல்களின்...

2022-11-28 13:54:27
news-image

தம்பலகாமம் பிரதேச சாகித்திய விழா

2022-11-28 13:44:33
news-image

தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வி...

2022-11-28 13:44:12
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட...

2022-11-28 13:28:39
news-image

சகவாழ்வுக்கான இளைஞர் பங்களிப்பு சஞ்சிகையின் வெளியீடு

2022-11-28 12:34:01
news-image

போதைப்பொருள் - பெண்கள், சிறுவர்கள் பாதிப்பை...

2022-11-28 12:12:08
news-image

சேனையூர் கிராமத்தில் கணினி வளநிலையம் ஆரம்பித்து...

2022-11-28 11:35:54