விண்வெளி  மையத்திற்கு தனி நபர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவிருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை மட்டும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து சென்ற நாசா, இனி தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. 

முதல் சுற்றுலா பயணத்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க  திட்டமிட்டுள்ளதோடு,வின்வெளியில் சுற்றுப்பயனத்தை மேற்கொள்ள 58 மில்லியன் ரூபா அமெரிக்க டொலர் கோரவுள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 30 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி மற்றய நாட்டினரும் அனுமதிக்கப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.