விசேட நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் கிளை காரி­யா­ல­ய­மொன்றை மே தினத்­தன்று கிரு­லப்­ப­னையில் திறந்தால் பொது எதி­ர­ணியில் மறைந்­துள்ள திரு­டர்கள் பலரை கைது செய்­வ­தற்கு வாய்ப்பு ஏற்­படும் என டிஜிட்டல் தொழில்­நுட்ப துறை அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

பொது எதி­ர­ணி­யுடன் நேருக்கு நேர் மோது­வ­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். மே தினத்­திற்கு இலட்­சக்­க­ணக்­கா­னோரை நாம் கள­மி­றக்­குவோம். நாம் மோது­வ­தற்கு தயார்.

பொது எதி­ர­ணி­யினர் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்­பினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மே தின கூட்­டத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொள்­வாரா என்­பது தொடர்பில் எந்­த­வொரு தக­வல்­களும் கிடை­யாது. இருந்­தாலும் மறை­முக பிர­மு­க­ராக சில வேளை­களில் கலந்து கொள்ள முடியும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பிட்ட கோட்­டே­யி­லுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளார் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ மேலும் குறிப்­பி­டு­கையில்,

தொழி­லா­ளர்­களின் தினத்தை கொண்­டா­டு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எந்­த­வொரு அரு­க­தையும் கிடை­யாது. அது முத­லா­ளித்­துவ கட்சி என்று சிலர் தொழி­லா­ளர்­க­ளுக்­காக நீலக்­கண்ணீர் வடிக்­கின்­றனர். இருந்­த­போ­திலும் தொழி­லா­ளர்­க­ளுக்­காக பல்­வே­றுப்­பட்ட நலத்­திட்­டங்­களை ஐக்­கிய தேசியக் கட்­சியே பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது.

ஊழியர் சேம­லாப நிதி­யத்­திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­திய எஸ்.டப்­ளியூ.ஆர்.டீ பண்­டா­ர­நா­யக்­க­வாக இருக்க முடியும் . ஆனாலும் அதனை உரிய வகையில் ஒழுங்­குப்­ப­டுத்­த­லுக்கு உட்­ப­டுத்தி சரி­வர அமுல்ப்­ப­டுத்­தி­யது ஐக்­கிய தேசியக் கட்­சி­யாகும். நலத்­திட்­டங்­களை செயல்ப்­ப­டுத்­தி­யுள்ளோம். தொழி­லா­ளர்­க­ளுக்­காக சட்­ட­மூ­லங்­களை நாம் கொண்­டு­வந்து நிறை­வேற்­றி­யுள்ளோம். ஆனால் தொழி­லா­ளர்கள் தொடர்பில் வீண் கண்ணீர் வடிக்­கின்­றனர்.

இம்­முறை மே தினம் என்ற பெயரில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்­காக பொது எதி­ர­ணி­யினர் மே தினத்தை கொண்­டா­டு­கின்­றனர். ஆனாலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது அர்ப்­ப­ணிக்கும் தொழி­லா­ளர்­களின் தினம் என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் கொண்­டா­ட­வுள்ளோம். எமது மே தினத்தில் இணைய கூடி­ய­வர்கள் பொரு­ளா­தா­ரத்தை சரி­யான பாதைக்கு கொண்டு வரு­வ­தற்கு அர்ப்­ப­ணிக்க தயா­ராக இருக்க கூடி­ய­வர்­க­ளாகும்.

ஆனால் தற்­போது திரைக்கு பின்னால் இருந்த சுப்பர் மேன் தற்­போது வௌியே வந்­துள்ளார். அவ­ரது வருகை பொது எதி­ர­ணி­யினை இல்­லாமல் செய்து விடும். அந்த சுப்பர் மேன் வேறு யாரு­மில்லை. மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தோல்விக் காரணம் என்று கூறப்­பட்டவர் பஷில் ராஜ­ப­க்ஷ­வாகும்.ஆனாலும் விமல் வீர­வன்ஸ போன்றோர் வெட்­க­மின்றி பஷில் ராஜ­ப­க்ஷ­வுடன் ஒரு மேடையில் அமர்ந்­துள்­ளனர்.

அத்­துடன் பொது எதி­ர­ணி­யுடன் நேருக்கு நேர் மோது­வ­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். இம்­முறை ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­ச­ரவை பெற்ற பின்னர் இடம்­பெறும் முத­லா­வது மே தின கூட்­ட­மாகும். இதன்­படி கொழும்பு கெம்பல் பார்க் மைதா­னத்­திற்கு இலட்­சக்­க­ணக்­கா­னோரை நாம் கள­மி­றக்­குவோம்.நாம் மோது­வ­தற்கு தயார். பொது எதி­ர­ணி­யினர் தயாரா? விசேட நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் கிளை காரி­யா­ல­ய­மொன்றை மே தினத்­தன்று கிரு­ளப்­ப­னையில் திறந்தால் பொது எதி­ர­ணியின் மறைந்­துள்ள திரு­டர்கள் பலரை கைது செய்­ய­வ­தற்கு வாய்ப்பு ஏற்­படும்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் இலங்கை மீன் ஏற்­று­ம­திக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை எம்மால் இல­கு­வாக நீக்க முடிந்­தது. ஆனாலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியின் போது அதற்­கான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை. தற்­போது கூட தாய்­லாந்து சென்று உல­கமே தேடும் உத­யங்க வீர­துங்­க­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்துகின்றார். இதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையையும் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.

மறைவான பிரமுகராக

மைத்திரி கலந்து கொள்ளலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வாரா என்பது தொடர்பில் எந்தவொரு தகவல்களும் கிடையாது. இருந்தாலும் மறைமுக பிரமுகராக சில வேளைகளில் கலந்து கொள்ள முடியும்.