இன்றும், நாளையும் மழை; 6 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை - இலங்கை வளி­மண்­ட­வியல் திணைக்­களம்

Published By: Daya

08 Jun, 2019 | 09:53 AM
image

(எம்.மனோ­சித்ரா)

நாட்டின் தென்­மேற்குப் பகு­தியில் இன்றும் நாளையும் பலத்த காற்­றுடன் கூடிய மழை பெய்­யக்­கூடும் என்று இலங்கை வளி­மண்­ட­வியல் திணைக்­களம் எதிர்வு கூறி­யுள்­ளது. களுத்­துறை, இரத்­தி­ன­புரி, காலி, மாத்­தறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மாவட்­டங்­களில் 150 - – 200 மில்லி மீற்றர் வரை­யி­லான மழை வீழ்ச்சி பதி­வா­கலாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

கொழும்பு, கம்­பஹா, புத்­தளம், கண்டி, நுவ­ரெ­லியா, அம்­பாந்­தோட்டை மற்றும் மன்னார் ஆகிய மாவட்­டங்­களில் 100 –- 150 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்­யலாம் எனவும் எதிர்வுகூறப்­பட்­டுள்­ளது. ஊவா மாகா­ணத்தில் குரு­ணாகல் மற்றும் மன்னார் மாவட்­டத்தின் ஒரு சில பகு­தி­களில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதி­வாகும் என்றும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. 

மத்­திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகு­தி­க­ளி­லும், ஊவா மாகாணம், அம்­பாறை மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்­டங்­களிலும் இடைக்­கி­டையே மணித்­தி­யா­லத்­துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓர­ளவு பலத்த காற்று வீசக்­கூடும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 

திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து மன்னார் வழி­யாக காங்­கே­சன்­துறை தொடக்கம், மாத்­த­றை­யி­லி­ருந்து பொத்­துவில் வழி­யாக அம்­பாந்­தோட்டை வரை­யான கடற்­ப­ரப்பில் மணித்­தி­யா­லத்­துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்­கூடும். இவ்­வாறு பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் ் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59