சேலம் சென்னை இடையேயான 8 வழி சாலை திட்டம் ஏன்? என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சேலத்தில் அரசு விழாவில் தெரிவித்ததாவது, 

“ உலக தரத்திற்கு ஏற்ப சாலைகளை ஏற்படுத்தவே எட்டு வழி சாலையை மத்திய அரசு அறிவித்தது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் சேலம் எட்டு வழி வீதி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.

யாருடைய நிலத்தையும் பறித்து வீதி திட்டத்தை அரசு செயற்படுத்தாது. சேலம் எட்டு வழி சாலை திட்டம் பொதுமக்களின் நலனுக்காகத்தானே தவிர, தனி நபர் நலன்களுக்காக அல்ல. 8 வழி வீதி திட்டத்தை எதிர்ப்பவர்களை சமாதானப்படுத்தி அந்தத் திட்டம் செயற்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தான் சேலத்தில் 8 வழி வீதி திட்டம் அறிவிக்கப்பட்டது.” என்றார்.

முன்னதாக சேலம் சேலத்தில் அரசு சார்பில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் பணிகளின் நிறைவடைந்த ஒரு பகுதியை அவர் இன்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.