இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி உலகின் முன்னணி இணைய பொழுதுபோக்கு சேவையுடன் இணைந்து செயற்படுவதாக அறிவித்துள்ளது. 

இந்த கூட்டிணைவானது அனைத்து டயலொக் பிற்கொடுப்பனவு மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் தங்களின் Netfix  கட்டணத்தினை தங்களுடைய மாதாந்த மொபைல் கட்டண பட்டியலுடன் இணைக்கக்கூடிய வசதியினை வழங்குவதுடன் இணையற்ற சௌகரியத்தினையும் பாதுகாப்பினையும் வழங்குகின்றது,இந்த நேரடியாக பில் கட்டணங்களை செலுத்தும் வசதி காணப்படுவதினால் வாடிக்கையாளர்கள் தங்களின் கிரடிட் மற்றும் டெபிட் அட்டைகளின் விபரங்களை பகிர்ந்துக்கொள்ளவது அவசியமற்றதாகின்றது.

டயலொக் பிற்கொடுப்பனவு மொபைல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த Netfix   நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் உயர்தர பட அமைப்பில் பார்வையிட ஒவ்வொரு மாதமும் 5G Data வினை இலவசமாக வழங்குகின்றது. தங்களின் மொபைல் எண்ணை பயன்படுத்தி இணையத்துடன் இணைந்து வரம்பற்ற மற்றும் விளம்பர இடைவேலை இன்றி எந்தவொரு மொபைல், laptop,desktop, tablet,அல்லது தொலைக்காட்சியின்  ஊடாக Netflix  சிறப்பம்சங்களை கண்டு களிக்க டயலொக் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர் Netflix க்கு sign-up அல்லது sign in செய்ய வேண்டும் 190க்கும் அதிகளவான நாடுகளில் உள்ள 139 மில்லியனுக்கும் அதிகளவான கட்டணம் செலுத்தும்  Netflix  அங்கத்தவர்கள் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் இன்னும் அதிகளவான மொழிகளிலுள்ள தொலைக்காட்சி தொடர்கள் ஆவணப்படங்கள் மற்றும் சிறப்பு திரைப்படங்களை பார்வையிடுகின்றார்கள். 

இலங்கையில் உள்ள பாவனையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை டவுன்லோட் செய்து Netflix on-the-go மூலம் இணைய வசதி இன்றி தங்களுடைய மொபைல் தொலைபேசிகளில் பார்வையிட முடியும்.

டயலொக்  ஆசி ஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் உலகளாவிய மற்றும் உள்ளடக்க சேவைகள் பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் மங்கள ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில்,  Netflix உடனான எங்கள் கூட்டண்மையானது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அசல் மற்றும் உரிமம் பெற்ற உள்ளடக்கத்தின் நட்சத்திர அட்டணைக்கு உதவுகின்றமையினால் டயலொக் ViU  வழங்கும் உள்ளடக்கத்தை பலப்படுத்துகின்றது. 

டயலொக் வாடிக்கையாளர்கள் இலங்கையில் சிறந்த வீடியோ வலையமைப்பில் Netflix இல் கிடைக்கக்கூடிய சிறந்த உள்ளடக்கத்தை எப்போது எங்கிருந்தும் பார்வையிட முடியும். மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையினை செயற்படுத்திக்கொள்ளும் போது ஸ்மார்ட் தொலைக்காட்சி உள்ளடங்களாக எந்தவொரு திரையிலும் பார்வையிடலாம்.

Netflix தெற்கு ஆசியாவின் வர்த்தக அபிவிருத்தி இயக்குனர் அபிஷேக் நாக் உரையாற்றுகையில் இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் மொபைல், வீடியோ நுகர்தலுக்கான முக்கிய பங்காற்றுகின்றது. 

பாவனையாளர்கள் தங்களின் மொபைல் மற்றும் புரோட்பாண்ட் வலையமைப்புக்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்வையிடுகின்றார்கள். 

மேலும் Netflix கடடணத்தை தங்களின் மாதாந்த பில் பட்டியலுடன் இணைத்து செலுத்தவதற்கான வசதியினையும் வழங்கியுள்ளமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.