(செ.தேன்மொழி)

குருவிட்ட பிரதேசத்தில் போலி நாணயத்தாளுடன்  இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வியாபார நிலையமொன்றில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது போலி நாணயத்தாளுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

கடுகெலியாவ - எலயாபத்துவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரையே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 5000 ரூபாய் போலி நாணயத்தாள் மூன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சந்தேக நபரை  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.