ஐந்து ஆண்டுகால சேவையினைப்பூர்த்தி செய்த Bookingmart Holidays (Pvt) Ltd (link to www.bookingmart.lk) கொட்டாஞ்சேனையில் இயங்கி வரும், இலங்கை சுற்றுலாத்துறையால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு உல்லாசப்பயண முகவர் நிறுவனமாகும்.

இது தனது அனுபவம், வெளிநாட்டு உல்லாசப்பயண முகவர் நிறுவனங்களின் திட்டங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் செயற்பாடுகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு Colombo City Drive (link to https://www.colombocitydrive.lk) என்ற வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

 இதன் மூலம் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு கொழும்பு நகரை சுற்றிக்காட்ட கவர்ச்சியான வசதிகள் செய்து கொடுக்கப்படும். கொழும்பின் முக்கிய நகரங்களை கார் மற்றும் வான் மூலம் முக்கிய இடங்களாக, காலி முகத்திடல், கங்காராமை விகாரை, சுதந்திர நினைவு சதுக்கம், கொழும்பு தேசிய நூதனசாலை, விகாரமகாதேவி பூங்கா, தாமரைத் தடாக அரங்கு, புறக்கோட்டை சந்தை போன்றவை சுமார் 4 மணித்தியாலங்களின் சுற்றிக்காட்டப்படும். உள்ளூர்வாசிகள் போல் சுற்றுலா செய்ய ஆட்டோ சவாரி, இரண்டாம் உலக மகா யுத்த கால ஜீப்களில் சுற்றுலா,இரட்டை அடுக்கு பஸ்களில் சுற்றுலா என சுற்றுலாப் பயணிகளைக் கவர பல தெரிவுகள் உள்ளன. 

பாரம்பரிய முறையிலான சுற்றுலாக்களைவிட இவ்வாறான வினோதமான சுற்றுலாக்களில் சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் இலங்கை வருதலை ஊக்குவிக்கும் எனவும் அதனால் இலங்கைக்கு அந்நியச் செலவாணியும் உள்ளூர் வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும் எனவும் திட்டம் பற்றி Bookingmart Holidays (Pvt) Ltd விளக்கமளிக்கிறது. 

இதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மாத்திரம் அல்லாது கொழும்பை கண்டுகளிக்க விரும்பும் இலங்கையர்களுக்கும் ஏற்புடையது. 

மேலும் இரத்தினக்கல், நகை, கைப்பணிப் பொருட்கள்,தேயிலை, சந்தைத் தொகுதி, செரமிக் பொருட்கள், பற்றிக் மற்றும் வாசனைத்திரவியங்கள் ஆகியவற்றை இச்சுற்றுலாவில் வாங்க வசதிகள் செய்யப்படும். மேலும், ஆயுள்வேத மசாஜ், கொழும்பின் முக்கிய கலை,கலாச்சார, வாணிப, விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் என்பன இத்திட்டத்தின் மூலம் அறிவிக்கப்படும். ஆக மொத்தத்தில் கொழும்பின் முக்கிய சுற்றுலா, நிகழ்ச்சிகளுக்கு இத்திட்டம் ஒரு வாசலாகச் செயற்படுகின்றது.