குருணாகல்- தம்புள்ள பிரதான வீதியில் தல்கொடபிட்டிய பகுதியில் பாடசாலை மாணவர்கள் பயணித்த தனியார் பஸ் ஒன்று மற்றுமொரு தனியார் பஸ்ஸிடனும் லொறியுடனும் மோதியதில் இன்று வெள்ளிக்கிழமை விபத்து ஏற்பட்டுள்ளது. 

குறித்த விபத்தில் 13 மாணவர்கள் உட்பட 17 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், தனியார் பஸ்ஸின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் குருணாகலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்கரெல்ல பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.