பௌத்த பீடங்­களின் கோரிக்கை: மல்­வத்து தேர­ருடன் பேச்சு நடத்­துவேன் - பிர­தமர்

Published By: Digital Desk 3

07 Jun, 2019 | 12:22 PM
image

(ரொபட் அன்­டனி)

முஸ்லிம் பிர­தி­நி­திகள் தொடர்பில் பௌத்­த­பீ­டங்­களின் தேரர்கள் விடுத்­துள்ள கோரிக்­கை­யுடன் நாங்கள் இணைந்து கொள்­கின்றோம்.  அவ்­வாறு கோரிக்கை விடுத்­த­மைக்­காக நன்றி தெரி­விக்­கின்றோம். அத்­துடன்  மல்­வத்து பீடத்தின்   தேரர்  நியங்­கொட விஜி­த­சி­றியை சந்­தித்து   இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த எதிர்­பார்க்­கின்றேன்  என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.  

இன ­ரீ­தியில் நாங்கள்  பிரிந்து செயற்­ப­டக்­கூ­டாது. சுதந்­தி­ரத்தின் பின்னர்   முஸ்லிம்   பிர­தி­நி­தி­களும் அங்கம் வகித்­தனர். புலி­களின் யுத்­த­ கா­லத்­திலும் முஸ்லிம் அமைச்­சர்கள் அங்கம் வகித்­தனர் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

நேற்று பாரா­ளு­மன்றக் கட்­டிடத் தொகு­தியில்  ஆளும் கட்சி  பின்­வ­ரிசை பாரா­ளு­ மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன்  இடம்­பெற்ற சந்­திப்­பி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.  

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், 

 கடந்­த ­வாரம்   மேற்­கொள்­ளப்­பட்ட    சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம்  மற்றும் அதன் பின்னர்  முஸ்லிம் அமைச்­சர்கள்   பத­வியை  இரா­ஜி­னாமா செய்­தமை என்­பன   ஆரோக்­கி­ய­மான நிலை­மைகள் அல்ல. இது தொடர்பில்   நான்கு  பௌத்த பீடங்­களும்  முன்­வைத்த  கோரிக்­கை­யுடன் நான் முழு­மை­யாக இணைந்­து­ கொள்­கின்றேன். இன­ ரீ­தியில் பிரிந்து செயற்­ப­டு­வது   ஆரோக்­கி­ய­மான செயற்­பா­டாக  அமை­யாது.  உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் நாட்டின் அனைத்து இன மக்­களும் இணைந்து செயற்­பட்­டனர். அவ்­வா­றான ஓர் ஒற்­றுமை  இதற்கு முன்னர்   இருந்­ததில்லை.   அந்த ஒற்­று­மையை வைத்து  எதிர்­கால பய­ணத்தை முன்­னெ­டுக்க நாங்கள் திட்­டங்­களைத் தயா­ரித்தோம்.  எனினும் கடந்­த ­வாரம்  மேற்­கொள்­ளப்­பட்ட  உண்­ணா­வி­ரதப் போராட்டம் அதனால்  மேலெ­ழும்­பிய இன­வாதம்,  முஸ்லிம் அமைச்­சர்கள் பதவி வில­கி­யமை   என்­பன கார­ண­மாக முஸ்லிம் மக்கள்   தூர விலகிச் சென்­றுள்­ளனர்.  இது நாட்­டுக்கு ஒரு சிறந்த நிலைமை அல்ல என்­பதை நாம் புரிந்­து­கொள்­ள­ வேண்டும்.  கடந்­த­ வாரம் ஓர்  இன­வாதச் செயற்­பாடு இடம்­பெற்­றது என்­பதை  ஏற்­றுக்­கொள்­ள­ வேண்டும்.   பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் பின்னர்  சந்­தேக நபர்­களைக்   கண்டு பிடிக்க விரை­வாக நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். சட்டம் ஒழுங்கு பாது­காக்­கப்­பட்­டது. எனினும்  ஒரு­ சிலர் அதனை முறி­ய­டித்துச் செயற்­பட்­டனர்.     குளி­யாப்­பிட்டி பிர­தே­சத்தில் ஓர் இன­வாத செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டது.  அதே­போன்று  கடந்­த ­வா­ரமும்  ஓர் இன­வாதச் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பிர­தேச மட்­டத்­தி­லேயே இந்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.   காரணம்   நாட்டில் அமைதி நில­வு­வ­தையும்   ஐ.எஸ். பயங்­க­ர­ வாதம் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் இன­வா­திகள் விரும்­ப­வில்லை.  

பௌத்­த­பீ­டங்­களின்  தேரர்கள் விடுத்த  கோரிக்­கை­யுடன் நாங்கள் இணைந்துகொள்­ கின்றோம். அவ்­வாறு இணைந்­த­மைக்­காக நன்றி தெரி­விக்­கின்றோம். இன ­ரீ­தியில் நாங்கள் பிரிந்து செயற்­ப­டக்­ கூ­டாது. சுதந்­தி­ரத்தின் பின்னர் முஸ்லிம் பிர­தி­நிதி­களும் அங்கம் வகித்­தனர். புலி­களின் யுத்­த ­கா­லத்­திலும் முஸ்லிம் அமைச்­சர்கள் அங்கம் வகித்தனர். இது தொடர்பில் ஒரு பரந்துபட்ட கலந்துரையாடலை எதிர்பார்க் கின்றோம்.  அத்துடன்  மல்வத்து பீடத்தின்   தேரர்  நியங்கொட விஜிதசிறியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கின்றேன்.   யாராவது  இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுத்தால்   அதற்கு நாம் முகம்கொ டுக்கத் தயாராக வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32