முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்திற்காக இதுவரையில் சுமார் 229 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி தொடக்கம் இன்று வரையிலான நான்கு தினங்களில் சுமார் 941 வேலைத் திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

குறித்த வேலைத் திட்டங்கள் ஊடாக 54 ஆயிரத்து 685 பேர் நன்மை அடைந்திருப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்தின் நான்காவது நாளான நேற்று 262 வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

இதற்காக சுமார் 137 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நன்மையடைந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் ஜானதிபதி தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளையத்தினம் (8) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.