முஸ்லிம் எம்.பி.க்களின் இரா­ஜி­னாமா கடிதம் தொடர்பில் சபையில் சர்ச்சை

Published By: R. Kalaichelvan

07 Jun, 2019 | 11:13 AM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம் அமைச்­சர்­களின் இரா­ஜி­னாமா கடிதம் தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆளுங்­கட்­சி­யி­ன­ருக்­கு­மி­டையே கடும்  வாதப்­பி­ர­தி­வாதங்கள் இடம்­பெற்­றன.

பாரா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. பிர­தான நிகழ்­வுகள்

நிறை­வ­டைந்த பின்னர். முஸ்லிம் அமைச்­சர்­களின் இராஜி­னாமா கடிதம் குறித்து ஊட­கங்­களில் வெளிப்­பட்­டி­ருக்கும் செய்­தி­தொ­டர்­பிலும் மகா­சங்­கத்­தினர் விடுத்­தி­ருக்கும் கோரிக்கை தொடர்­பா­கவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  விசேட கூற்­றொன்றை முன்­வைத்து உரை­யாற்­றினார். அதனைத் தொடர்ந்து  சபையில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆளுங்­கட்­சி­யி­ன­ருக்­கு­மி­டையே  வாதப்­பி­ர­தி­வாதம் இடம்­பெற்­றது.

இதன்­போது ஆரம்­ப­மாக இராஜி­நாமா கடி­தம்­தொ­டர்­பாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெளி­வு­ப­டுத்­து­கையில் அமைச்­சுப்­ப­த­விகள் மற்றும் இரா­ஜாங்க பிரதி அமைச்­சுப்­ப­த­வி­களை வகித்­து­வந்த முஸ்லிம் அமைச்­சர்கள் கடந்த திங்­கட்­கி­ழமை இரவு நேரத்தில் என்னை சந்­தித்து அவர்கள் அனை­வரும் கையெ­ழுத்­திட்டு அவர்­க­ளது இராஜி­னாமா கடி­தத்தை என்­னிடம் கைய­ளித்­தி­ருந்­தனர். மறுநாள் அமைச்­ச­ரவை கூட்­டத்­தின்­போது இது­தொ­டர்­பாக ஜனா­தி­ப­திக்கு நாங்கள் தெரி­வித்தோம். அத்­துடன் அன்­றைய தினம் பிற்­பகல் வேளையில் அமைச்­சர்­களின் இராஜி­னாமா கடிதம் தொடர்­பாக எனது அலு­வ­லக சட்ட ஆலோ­ச­கர்­க­ளுக்கு அறி­வித்தேன்.

இதன்­போது இராஜி­னாமா கடி­தங்கள் ஜனா­தி­ப­திக்கு அனுப்ப தனித்­த­னி­யாக வழங்­க­வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டது.மறுநாள் நோன்­புப்­பெ­ருநாள் கொண்­டாட்­டத்­துக்­காக அதி­க­மான உறுப்­பி­னர்கள் வெளிப்­பி­ர­தே­சங்­க­ளுக்கு சென்­றி­ருந்­ததால் இராஜி­னாமா கடி­தங்­களை இன்­றைய தினம் (நேற்று) கைய­ளிக்­கு­மாறு கோரி­யி­ருந்தோம். அந்­த­வ­கையில் அதி­க­மான கடி­தங்கள் கிடைக்­கப்­பெற்­றி­ருக்­கின்­றன. இன்னும் சில கடி­தங்கள் கிடைக்க இருக்­கின்­றன. அவை கிடைத்­ததும் அந்த வேலைத்­திட்டம் முடி­வ­டையும் என்றார்.

இதன்­போது எழுந்த தினேஷ் குண­வர்த்­தன தெரி­விக்­கையில் அடிப்­ப­டை­வா­தத்தை இல்­லா­ம­லாக்­கு­மாறும் முஸ்லிம் மக்கள் அனை­வரும் அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அல்ல என்றும் எதிர்க்­கட்சி தலைவர் உட்­பட நாங்கள் அனை­வரும் தெரி­வித்து வந்தோம். அத்­துடன் முஸ்லிம் அமைச்­சர்கள் கடந்த திங்­கட்­கி­ழமை தங்கள் பத­வி­களை இராஜி­னாமா செய்­த­தாக அறி­வித்­தி­ருந்­தார்கள். ஆனால் அவர்­களின் இராஜி­னாமா கடிதம் ஜனா­தி­ப­திக்கு இது­வரை கிடைக்­க­வில்லை என்றும் அதனால் அவர்கள் தொடர்ந்தும் அமைச்­சுப்­ப­த­வி­களில் இருப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி செய­லாளர் தெரி­வித்­துள்­ள­தாக பத்­தி­ரி­கையில் செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.  அத­போன்று முஸ்லிம் அமைச்­சர்கள் தொடர்ந்தும் அமைச்­சுப்­ப­த­வி­களில் இருப்­பார்கள் என்று சபை­மு­தல்­வரும் தெரி­வித்­தி­ருந்தார். 

ஆனால் பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிரலில் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்­பான விவாதம் 18ஆம் திகதி இடம்­பெறும் என்று இருக்­கின்­றது. அதனால் குறித்த தினத்தில் அது­தொ­டர்­பான விவாதம் இடம்­பெ­றுமா இல்­லையா? இது­தொ­டர்பில் சபைக்கு தெரி­விக்­க­வேண்டும். உறுப்­பி­னர்கள் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பதவி வில­க­வில்லை என்று பிர­த­மரும் தெரி­வித்தார்.அதனால் இது­தொ­டர்பில் தெளி­வான தீர்ப்­பொன்றை தெரி­விக்­க­வேண்டும் என்றார்.

இதன்­போது ரவூப் ஹக்கீம் எழுந்துஇ எங்கள் நிலை­மைய சந்­தர்ப்­ப­மாக கொண்டு தினேஷ் குண­வர்த்­தன அர­சியல் லாபம் தேட முயற்­சிக்­கின்றார் என்­பது எமக்கு தெளி­வா­கின்­றது. என்­றாலும் நாங்கள் பொது­வாக எமது இராஜி­னாமா கடி­தத்தை பிர­த­ம­ருக்கு கைய­ளித்­தி­ருந்தோம்.

 என்­றாலும் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் தனித்­த­னி­யா­கவே உறுப்­பி­னர்கள் ராஜி­னாமா கடி­தங்­களை கைய­ளிக்­க­வேண்டும் என்ற தகவல் பிர­த­ம­ருக்கு கிடைத்­த­போது எமது நோன்­புப்­பெ­ருநாள் கொண்­டாட்டம் வந்­ததால் அதனை உட­ன­டி­யாக எமக்கு மேற்­கொள்ள முடி­யாமல் போனது. தற்­போது எமது இராஜி­னாமா கடி­தங்கள் தயா­ரிக்­கப்­பட்டு கைய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றன.  கடந்த திங்­கட்­கி­ழமை நாங்கள் தெரி­வித்­த­து­போன்று அன்­றைய தினத்­துக்கு பின்னர் நாங்கள் எவரும் அமைச்­சர்­க­ளாக செயற்­ப­டவும் இல்லை. அமைச்­சுக்­க­ளுக்கு செல்­லவும் இல்லை. அமைச்சர் என்­ற­வ­கையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மான நிகழ்­வுக்­க­ளுக்கு செல்­லவும் இல்லை. எனவே கடந்த திங்­கட்­கி­ழமை முதல் நாங்கள் பத­வி­களில் இருந்து வில­கினோம் என்­பதே உண்­மை­யான நிலைமை என்றார். 

இதன்­போது சபா­நா­யகர் தனது நிலைப்­பாட்டை அறி­விக்­கும்­போது இராஜி­னாமா கடி­தத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்ற செய்தி எனக்கு காலை­யிலே கிடைத்­தது. எப்­படி இருந்­த­போதும் அவர்கள் முறை­யாக கடி­தத்தை கைக­ளிக்­கும்­வரை நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்­பான விவாதம் ஒழுங்கு பத்­தி­ரத்தில் தொடர்ந்து இருக்கும். அதன் பின்னர் மாற்­றிக்­கொள்­ளலாம் என்றார்.

இதன்­போது எதிர்க்­கட்­சி­களின் பிர­தம கொரடா மஹிந்த அம­ர­வீர தெரி­விக்­கையில் முஸ்லிம் அமைச்­சர்கள் மீண்டும் அமைச்­சுப்­பொ­றுப்­புக்­களை வகிக்­க­வேண்டும் என்று மகா­நா­யக்க தேரர்கள் தெரி­வித்­தி­ருப்­பதை வர­வேற்­கின்றேன். இந்த பிரச்­சினை நீடிக்­காமல் சமா­தா­ன­மாக  முடித்­துக்­கொள்­ளவே மகா­சங்க தலை­வர்கள் இந்த கோரிக்­கையை விட்­டி­ருக்­கின்­றனர். 

அதனால் முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­திகள் கலந்துரையாடி மகாசங்க தலைவர்களுடன் பேசி தீர்மானிக்கவேண்டும். மீண்டும் அடிப்படைவாத தாக்குதல் ஒன்று இடம்பெறக்கூடாது. அத்துடன் இந்த நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதமோ சிங்கள அடிப்படைவாதமோ வேறு எந்த அடிப்படைவாதத்துக்கும் அடமளிக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அதனால் இடம்பெற்ற நிகழ்வுகளை பாடமாக எடுத்துக்கொண்டு நாட்டில் சிங்கள முஸ்லிம்  தமிழ் மக்கள் இணைந்து நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ள தேவையான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும். அதற்காக முஸ்லிம் தலைவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு கலந்துரையாடலொன்றுக்கு செல்லவேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22