மன்னார் பேசாலை வெற்றிமாங்குடியிருப்பு 50 வீட்டுத் திட்டம் பிரதான வீதி  வடக்கு கடற்கரை அண்டி பகுதியில் 'அடைக்கல அன்னை சிற்றாலயம்' அமைக்க நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஒதுக்கிய 50 இலட்சம் ரூபா நிதி ஒதக்கீடு மற்றும் பேசாலை கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் , மீனவர்களின் ஒத்துழைப்புடன் குறித்த சிற்றாலய கட்டுமான பணிக்கான அடிக்கல் நடும் வைபவம் இடம்பெற்றது. 

பேசாலை பங்குத்தந்தை அருட்தந்த தேவராஜா கொடுத்தோர் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.பிரிமுஸ் சிறாய்வா, மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான கொன்சல் குளாஸ், கிறிஸ்டி சின்னராணி குரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தனர்.

 குறித்த அடைக்கல அன்னை ஆலயம் மீனவர்களின் நலன் கருதி குறித்த பகுதியில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.