(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் நாங்கள் தீர்மானம் ஒன்றை எடுப்போம். அதேபோன்று விமல் வீரவன்சவுக்கு முதுகெலும்பு இருக்குமானால் ச.தொ.ச வாகனங்கள் பயங்கரவாதிகளுக்கு பயன்படுத்தியதை ஒப்புவிக்க வேண்டும் என அமீர் அலி பாராளுமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து அப்பாவி முஸ்லிம்கள் அதிகமானவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுபவர்களையும் பிணை வழங்க முடியாதவாறு பொலிஸார் குற்றங்களை பதிவு செய்துள்ளனர். கப்பலின் சுக்கான் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்தமைக்காக முஸ்லிம் பெண் ஒருவர் 21 நாள் சிறையிலடைத்து விசாரிக்கப்பட்டார். ஆனால் குருணாகலையில் தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் சாதாரண சட்டத்தில் கைதுசெய்யப்படு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் இந்த நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்கள் முஸ்லிம்களுக்கு ஒருசட்டமும் மற்றவர்களுக்கு ஒரு சட்டமாகவும் இருக்கின்றதாகவே தெரிகின்றது. அத்துடன் மகாசங்கத்தினரின் கோரிக்கைக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம். அவர்கள் எதிர்க்கட்சி அரசியலவாதிகள் போன்று சிந்திப்பவர்கள் அல்ல. நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்தே எம்மிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அதனால் அவர்களின் கோரிக்கை தொடர்பில் நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.