இலங்கையின் முன்னணி சிங்கள திரைப்பட நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தென்னிந்திய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.

இந்தியாவிலுள்ள ரஜனிகாந்தின் இல்லத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்க, அவரை சந்தித்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தை சந்தித்ததை மகிழ்ச்சியாக இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தனது டுவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.