பவுன்சரால் தடுமாறிய ஆஸி கொல்டர் - ஸ்மித்தால் மீண்டது

Published By: Vishnu

06 Jun, 2019 | 07:07 PM
image

கொல்டர் - ஸ்மித்தின் வலுவான ஆட்டத்தினால் சரிவிலிருந்து மீண்டெழுந்த அவுஸ்திரேலியா மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக  288 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ண தொடரின் 10 ஆவது லீக் போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கிடையிலும் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆரம்ப வீரர்களாக கறமிங்கி துடுப்பெடுத்தாடி 15 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதன் பின்னர் இவர்களின் இணைப்பாட்டத்தை மேற்கிந்தியத் தீவுகளின் பந்து வீச்சாளர்கள தகர்த்தெறிந்தனர்.

மூன்றாவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட உஷேன் தோமஸ் அந்த ஓவரின் இரண்டவது பந்தில் பிஞ்ச்சை 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க செய்தார். நான்காவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட ஷெல்டன் கோட்ரெல் அந்த ஓவரின் இறுதிப் பந்தில் அவுஸ்திரேலிய அணியின் நங்கூரமாகத் திகழும் டேவிட் வோர்னரை 3 ஒட்டத்துடன் ஆட்டமிழக்க வைத்து சலூட் அடித்தார் (26-2).

தொடர்ந்து களமிறங்கிய உஷ்மன் கவாஜா 13 ஓட்டத்துடனும், மெக்ஸ்வெல் டக்கவுட்டுடனும், மார்கஸ் ஸ்டோனெனிஸ் 19 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அவுஸ்திரேலிய அணி 16.1 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களை பெற்று நிலைகுலைந்தது.

6 ஆவது விக்கெட்டுக்காக ஸ்டீபன் ஸ்மித் - அலெக்ஸ் கேரி ஜேடி சேர்ந்து சற்று நேரம் மைதானத்தில் தாக்குப் பிடித்தாட அவுஸ்திரேலிய அணி 23.2 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடந்ததுடன், 30 ஓவர்களின் நிறைவில் 146 ஓட்டங்களையும் பெற்றது.

31 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட ரஸல் அந்த ஓவரின் நான்காவது பந்தில் அலெக்ஸ் கேரியை 45 ஓட்டத்துடன் வெளியேற்றினார் (147-6).

7 ஆவது விக்கெட்டுக்காக கொல்டர்-நைல் களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர அவுஸ்திரேலிய அணி 32.2 ஆவது ஓவரில் அவுஸ்திரேலிய அணி 150 ஓட்டங்களை பெற்றதுடன் 35.4 ஆவது ஓவரில் ஸ்டீபன் ஸ்மித் மொத்தமாக 77 பந்துகள‍ை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம் அடங்கலாக அரைசதம் கடந்தார்.

இதன் பின்னர் 40 ஆவது ஓவர்களின் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றதுடன் 42.4 ஆவது ஓவரில் கொல்டர் அரைசதம் பெற்றார்.

இந் நிலையில் 44.2 ஆவது ஓவரல் ஸ்மித் 73 ஓட்டத்துடன் ஷெல்டன் கோட்ரெலின் அபார பிடியெடுப்பினால் ஆட்டமிழந்து வெளியேற 48.2 ஆவது ஓவரில் கொல்டர் 92 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றது.  பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் பிரத்வெய்ட் 3 விக்கெட்டுக்களையும், உஷேன் தோமஸ், ரஸல், ஷெல்டன் கோட்ரெல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஹோல்டர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Photo credit : ICC

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49