சமூக விடயங்கள் பற்றி கருத்துச் சொல்வதைத் தவிர்த்து வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது தைரியமாக அது குறித்துப் பேசத் தொடங்கியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமுல் படுத்திப் பேசாத மாநிலங்களிலும் இந்தியைத் திணிக்க முயற்சித்தது.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின ஏ.ஆர்.ரஹ்மானும் டுவிட்டர் பக்கத்தில் தனது இசையில் வெளியான இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன' என்ற பாடலை பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் பாடும் காணொளியை வெளியிட்டு பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது என்று பதிவிட்டார்.
இதன் மூலம் இந்தி திணிப்புக்கு மறைமுகமாக அவர் எதிர்ப்பு காட்டியதாகக் கூறப்பட்டது.
அதன் பிறகு இந்தி மொழி கட்டாயம் இல்லை என்று கல்விக் கொள்கையில் திருத்தம் வெளியிட்டதும் அதை வரவேற்ற ஏ.ஆர்.ரஹ்மான் அழகிய தீர்வு தமிழகத்தில் இந்தி கட்டாயம் அல்ல.திருத்தப்பட்டது' என்று பதிவிட்டார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அட்டானமஸ்'என்ற ஆங்கில வார்த்தையைப் பகிர்ந்துள்ளார்.
அதற்கான அர்த்தம் குறித்த ஆங்கில அகராதியையும் இணைத்துள்ளார்.
அதில் அட்டானமஸ் என்பது,தன்னாட்சி யார் தலையீடும் இல்லாமல் நிர்வகித்துக் கொள்வது என்பன போன்ற அர்த்தங்களையும் பகிர்ந்துள்ளார்.
இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
எதற்காக அதனை பதிவிட்டார் என்று சமூகவலைத்தளங்களில் கேள்வி எழும்பி வருகிறார்கள்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM