(நா.தினுஷா)

சட்ட ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசிய கட்சியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து சட்ட ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி தன் வசம் வைத்திருப்பாராக இருந்தால் அந்த அமைச்சுடன் தொடர்புடைய எந்தவொரு விடயம் தொடர்பிலும் எங்களை கேள்விக் உட்படுத்த முடியாது என்று  ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.