முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சுக்களை மீண்டும் ஏற்க வேண்டுமென்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடு - துஷார இந்துநில்

Published By: R. Kalaichelvan

06 Jun, 2019 | 05:17 PM
image

(நா.தினுஷா) 

அமைச்சுப் பொறுப்புக்களை  மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு நாட்டில் தேசிய ஒற்றுமையையும் சமத்துவத்தையும் ஏற்படுத்துவதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

 

மகாநாயக்க  தேரர்களின் இந்த நிலைபாட்டிலேயே  ஐக்கிய தேசிய கட்சியும் இருப்பதாக பாராளுமன்ற  உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

குற்றம் சுமத்துவதை தனது துருப்பு சீட்டாக பயன்படுத்தி கொண்டு போலி அரசியல் நாடகங்களை எதிரணி அரங்கேற்றி வருகிறது. ஆயினும்  அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கும்  ஒவ்வொரு சூழ்ச்சியிலும் அவர்கள் தேல்வியையே சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் தோல்வியையே சந்திப்பார்கள்.   

எமது அரசாங்கம் குற்றவாளிகளை அங்கீகரிப்பது இல்லை. அவர்களை பாதுகாப்பதும்  இல்லை. பாராளுமன்ற  உறுப்பினர்  ரிஷாத் பதியதீன் மீது எதிரணியினர் முன்வைத்த குற்றச் சாட்டுக்கள் அனைத்தும்  போலி நாடகமாகும். 

குற்றச்சாட்டுகளில்  உண்மைத் தன்மை இருந்திருந்தால் குற்றம் சுமத்தியவர்களே பொலிசாரிடம் சாட்சிகளுடன் தமது  வாக்கு மூலங்களை பதிவு செய்திருப்பார்கள். ஆனால்  இதுவரையில்  எதிரணியினர் எந்த வாக்கு மூலத்தையும் முன்வைக்க வில்லை என்று குறிப்பிட்ட  அவர்  ராஜினாமா  செய்த அனைவரும் தமது  அமைச்சுக்களை மீண்டும் பொறுபபு ஏற்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 

அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“மஹரகம அக்கா” கைது!

2025-11-08 11:05:48
news-image

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...

2025-11-08 12:45:56
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோவின் பிணை மனு...

2025-11-08 10:49:17
news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50