பிற மாநிலங்களில் தமிழை விருப்பத்திற்குரிய பாடமாக இணைக்க சேர்க்க வேண்டும் என்று நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டர் பதிவை எடப்பாடி பழனிசாமி திடீரென நீக்கினார்.

இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் கஸ்தூரி ரங்கன் குழவின் வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.அந்த பாடத்தில் இந்தியை திணிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு தமிழகத்தில் கடும்' எதிர்ப்பு கிளம்பியது.

தமிழக அரசும் இருமொழிக் கொள்கை என்பதில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்தது.இதைத்தொடர்ந்து இந்தி கட்டாயம் அல்ல என்றும்,விருப்பப்பாடமாக இந்தி மொழியைத் தேர்வு செய்யலாம்  என்றும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை அறிக்கையில் திருத்தம் செய்தது.

முதல் அமைச்சர் வேண்டுகோள்...

எடப்பாடி பழனிசாமி,நரேந்திர மோடிக்கு விடுத்த வேண்டுகோள் தற்போது விவாத பொருளாகிவிட்டது.எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கைக்கு ஆதரவாகவும்,எதிராகவும் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தமிழைப் பிற மாநிலங்களில் விருப்ப பாடமாகச் சேர்ப்பதற்கு வேண்டுகோள் விடுத்துப் போட்ட டுவிட்டர் பதிவை அடுத்த மணிநேரத்தில் திடீரென நீக்கினார்.