(எம்.மனோசித்ரா)
முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகினாலும் தனித்தனி பதவி விலகல் கடிதங்களை கையளித்திருக்க வேண்டும். கூட்டாக கையெழுத்திட்டு கொடுத்த கடிதம் செல்லுபடியற்றது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பொரளையில் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
குற்றஞ்சாட்டப்படாமல் பதவி விலகியுள்ள அமைச்சர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவரை பாதுகாப்பதற்காக பதவி விலகினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடக் கூடாது.
கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து தேவாலயங்களில் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பலியான போது, இடம்பெறவிருந்த பாரியதொரு வன்முறையை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தடுத்தி நிறுத்தி மிகவும் பொறுமையும் செயற்பட்டார். அன்று தடுத்து நிறுத்தப்பட்ட வன்முறை தற்போது இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. இதனை பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் கவனத்திலெடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM