ஸ்ரீலங்கன் விமான சேவை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான (Great Ocean Road Running Festival) என்ற வைபவத்துக்கு உத்தியோகப்பூர்வ விமான சேவைக்கான அனுசரணை வழங்கியுள்ளது.

வுன் வேல்ட் என்ற உலகளாவிய விமான சேவை அமைப்பின் அங்கத்துவ நிறுவனமாக செயற்படும் ஸ்ரீலங்கன் விமான சேவை அவுஸ்திரேலியாவில் தனது வர்த்தக குறியீட்டை தொடர்ந்தும் நிலை நிறுத்தி வருகின்றது. அங்கு நடைபெற்ற 6 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப் போட்டிக்கு இது அனுசரணை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபல்யமான கொண்டாட்ட நிகழ்வாக இந்த கடல் வழி ஓட்டப் போட்டி அடையாளப்படுத்தப்படுகிறது .(Great Ocean Road)

இந்த வருடத்தில் வரலாற்றில் ஆகக் கூடுதலானோர் கலந்துக்கொண்ட நிகழ்வாக இது அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.  இவ்வைபவத்தில்,  8200 வீரர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

விமான சேவை வர்த்தக குறியீடுள்ள 6 கிலோ மீற்றர் ஓட்டப் போட்டிக்காக இம்முறை சுமார் 1000 பேர் கலந்துக்கொண்டனர்.இதில் ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்திற்கு டோம் செல்வூட் தெரிவானார். பெண்களுக்கான 6 கிலோ மீற்றர் ஓட்டப்போட்டியில் ஜோ.ஏன்.போல்ட் மற்றும் கெரோலின் க்ளேவி ஆகியோர் முதலாம் இடத்தில் தெரிவாகியுள்ளமை முக்கிய அம்சமாகும்.