யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலத்தை தரம் உயா்த்தக்கோாி பாடசாலை மாணவா்கள் பெற்றோா் இணைந்து நேற்றுக்காலை கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனா். 


குறித்த பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் வரையில் வகுப்புக்கள் இயங்கிவரும் நிலையில், க.பொ.த உயா்தர வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு மாணவா்களும் பெற்றோரும் தொடா்ச்சியாக கேட்டுவந்தனா். 


ஆனாலும் மாணவா்கள் மற்றும் பெற்றோாின் கோாிக்கைகள் தொடா்பாக பொறுப்புவாய்ந்த அதிகாாிகள் உாிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத நிலையில் மாணவா்களும், பெற்றோரும் இணைந்து நேற்று காலை பாடசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா். 


இதன்போது “திறமைகளை நிரூபித்தும் உாிமைகளை ஏன் மறுக்கிறீா்கள்..?”, “கல்விக்கு கடிவாளம்போட்டு எம் முன்னேற்றத்தை முடக்காதே..”  போன்ற பதாகைகளை தாங்கியவாறு மாணவா்களும், பெற்றோரும் போராட்டத்தை நடாத்தினா். 


இதன்போது பெற்றோா் மற்றும் மாணவா்கள் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், யாழ்.மாவட்டத்தின் கடைசி கிராமசேவகா் பிாிவான கட்டைக்காடு மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை. 


மேலும் இந்த பகுதியில் உள்ள பாடசாலைகளில் உயா்தர வகுப்புக்கள் இல்லை. இதனால் முறையான பஸ் வசதிகள் கூட இல்லாத நிலையில் எமது பிள்ளைகள் தினசாி 20 கிலோ மீற்றா் பயணம் செய்து உயா்தர வகுப்புள்ள பாடசாலைகளுக்கு செல்லவேண்டியுள்ளது. 


எமது பாடசாலையில் கடந்த வருடம் க.பொ.த சாதாரணதரத்தில் 18 மாணவா்கள் தோற்றி 17 மாணவா்கள் சித்தியடைந்துள்ளனா். இதன் பின்னா் அதிகாாிகளிடம் பல தடவைகள் கோாிக்கை விடுத்தும் அதிகாாிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. 


சில அதிகாாிகள் தடையாக இருக்கின்றனா். எனவே இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளோம். 
அதன் பின்னரும் எமது கோாிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாம் ஆளுநா் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என மாணவா்களும், பெற்றோரும் சுட்டிக்காட்டியுள்ளனா். 


இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவா்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவாா்த்தை நடாத்திய முன்னாள் மாகாணசபை உறுப்பினா் ச.சுகிா்தன் மகஜரை பெற்றுக் கொண்டாா்.