(நா.தனுஜா)

இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என்று இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியூதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அஸாத் சாலி ஆகியோர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைப் பதவி விலகுமாறு நாங்கள் கோரவில்லை. மாறாக தீவிரவாத செயற்பாடுகளுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தினால், அவர்களை விசாரணைகளுக்கு உட்படுத்தவும், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாதிருக்கவுமே அவர்கள் பதவி விலகுமாறு கோரப்பட்டனர். 

அவ்வாறிருக்கையில் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தாங்கள் முஸ்லிம்கள் என்ற கோணத்தில் சிந்தித்துப் பதவி விலகியிருக்கிறார்கள். 

எனவே இங்கு அவர்கள் தான் இனவாத அடிப்படையில் சிந்திக்கிறார்களே தவிர, சிங்களவர்கள் இனவாதிகள் அல்ல. பதவி விலகியவர்களில் குற்றச்சாட்டுக்கள் இல்லாதவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு நாம் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.