‘பயில்வான்’

Published By: Daya

06 Jun, 2019 | 12:55 PM
image

கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் நடிக்கும் ‘பயில்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

‘நான் ஈ’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் சுதீப்.  கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தாலும் ,தமிழ் திரையுலகிற்கு வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர். 

இவர் அதனைத் தொடர்ந்து பாகுபலி,  புலி, முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானவர். இவர் தற்போது ஒரே சமயத்தில் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும்‘ பயில்வான்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

 

இப்படத்தைப் பற்றி இயக்குநர் கிருஷ்ணா தெரிவிக்கையில்,

“ குத்துச்சண்டை மற்றும் மல்யுத்தம் ஆகிய இரண்டு விளையாட்டுகளை மையப்படுத்தி பயில்வான் உருவாகி இருக்கிறது.  இப்படத்திற்காக சுதீப் கடுமையாக உடற்பயிற்சி செய்து, தன்னுடைய தோற்றத்தை கதாப்பாத்திரத்திற்காக செதுக்கியிருக்கிறார்.

கதைக்களம் அனைத்து மொழி ரசிகர்களுடனும் எளிதாக ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது- இந்தியா முழுவதும் விளையாட்டு துறையில் ஒரேவிதமான மனநிலையுடன் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் இதனை பல மொழிகளில் வெளியிடுகிறோம். இப்படத்திற்காக மலையாளம் தவிர ஏனைய மொழிகளில் சுதீப்பே பின்னணி பேசியிருக்கிறார்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right