உலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்குச் சுந்தர் பிச்சை,அடினா பிரீட்மெனி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 அமெரிக்காவில் செயல்படும் கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த  சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்க பங்குச் சந்தை தலைவர் அடினா பிரீட்மேனியும் இவ்விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள, 'இந்தியா ஐடியா' மாநாட்டில் இருவருக்கும், இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.