இங்­கி­லாந்து அரண்­ம­னையில்  நடை­பெற்ற விருந்து நிகழ்ச்சியின்போது எலி­சபெத் மகாராணியின் முதுகில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவைத்­துள்­ளமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பிரித்தானிய மகாராணி எலி­சபெத்தை யாரும் தொட்டுப் பேசக்கூடாது என்­பது விதி­யாகும்.அதுபோன்று பொது இடத்தில் அரச குடும்­பத்­தி­ன­ரிடம் எப்­படி பழ­கு­வது என்­பது குறித்த எழுதப்ப­டாத விதி­யாகும்.

இந்த நிலையில் மகாராணியின் முதுகில் அமெ­ரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொட்டுப் பேசி­யது விதிமீறலாக கருதப்படுவதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.