ஹேரோயின் போதைப்பொருள் சுருள்களுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கொள்ளுப்பிட்டி பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர் 21 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் வைத்து குறித்த நபர்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 7 ஹேரோயின் போதைப்பொருள் சுருள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஹேரோயின் சுருள்களை அவர் விழுங்கியுள்ளமையால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவு  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.