ஜப்­பா­னிய கலைஞரொருவர், மனித வாய் போன்ற தோற்­றத்தில் பணப் பை ஒன்றை தயாரித்துள்ளார்.

மேற்படி பணப் பை இளைஞர் ஒரு­வரின் வாய்ப்­ப­குதியை ஒத்த தோற்­றத்­தி­லான, நாண­யங்­களை சேமித்து வைப்­ப­தற்­காக தயாரிக்கப்­பட்­டுள்­ளதாம்.

மேலும், இந்த வாய் அமைப்­புகள் பற்­களும் காணப்­ப­டு­கின்­றமை சிறப்பம்சமாகும். இதற்குள் நாண­யங்­களை வைப்­ப­தற்கு உதடு போன்ற பகு­தியை விரிக்க வேண்டும். நாண­யங்­களை வைத்­த பின் அதை அழுத்தி மூடி விடலாம்.
இந்த பையை உரு­வாக்­கு­தற்கு இரு மாதங்கள் தேவைப்­பட்­ட­தாக டூ தெரி­வித்­துள்ளார். இந்த விசித்­திர பணப்பை எதனால் உரு­வாக்­கப்­பட்­டது என்­பது இர­க­சியம் என அவர் கூறி­யுள்­ள­தாக ஜப்­பா­னிய வானொ­லி­யொன்று தெரி­வித்­துள்­ளது.