குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ  உண்மையற்ற பல விடயங்களை கூறி மக்களை தவறாக வழிநடாத்த முயற்சிக்கின்றார். குறிப்பாக கல்வித் துறையில் வட் வரி விதிக்க உள்ளதாக பிரசாரம் செய்கின்றார். பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட அறிக்கை மூலமாக மீண்டும் உண்மைக்கு புறம்பான பல விடயங்களை கூறியிருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது பேஸ்புக் பக்கத்தில்  பதிவொன்றை  வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையில் கல்வித் துறைக்கு வரி அறவிடப் போவதாக கூறியிருப்பதாகவும், அவ்வாறு வரி அறவிடப் போவதில்லை என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.


ஆரம்பக் கல்வி முதல் மூன்றாம் நிலைக் கல்வி வரை மற்றும் தனியார் வகுப்புக்களுக்கும் புதிய வட் வரி திருத்தத்தினூடாக வரி அறவிடப்பட மாட்டாது என்று தெரிந்திருந்தும்  மஹிந்த ராஜபக்ஷ மக்களை தவறான கருத்தில் வழிநடாத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.