BID நூற்றாண்டு சர்வதேச தர ERA விருதுகள் - 2016 : விருது வென்ற BMICH

Published By: Priyatharshan

29 Apr, 2016 | 12:21 PM
image

உலகம் நாடுகளிலிருந்து நிபுணர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் பங்குபற்றி செயற்திறன் மற்றும் சாதனைகளையும் மிக முக்கியமாக வர்த்தகம் மற்றும் செயல்பாடுகளின் தரத்தினை அடையாளப்படுத்தும் BID நூற்றாண்டு சர்வதேச தர ERA மாநாடு இந்த வருடம் ஜெனிவா நகரில் இடம்பெற்றது. 

அனைத்து செயல்பாட்டு பிரிவுகளிலும் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் குறைந்த செலவினை உருவாக்க உதவும் நிறுவனங்களின் தர செயற்திறனுக்கான அர்ப்பணிப்பை கௌரவித்து விருதுகள் வழங்கப்படுகிறது.

ஜெனீவா நகரில் இடம்பெற்ற BID தர மாநாட்டில் தங்க பிரிவில் சென்சரி சர்வதேச தர ERA விருதினை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH)வென்றுள்ளது. 

இந்த மண்டபமானது அத்துறையில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கையிலும் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த விருதானது கடந்த வருடத்தின் வெற்றியை கொண்டாடுவதற்கான சிறந்த வழியாகவும் அடுத்த ஆண்டில் தரம் மீது முக்கிய கவனம் செலுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது.

சர்வதேச தலைவர்கள் கூடியிருந்த இந்நிகழ்வில் நிறுவனத்தின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சுனில் திசாநாயக்க உரையாற்றினார். 

தற்போதைய உலக பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதன் துறையில் போட்டிமிக்க அனுகூலங்களை உருவாக்கி ஒவ்வொருநாளும் தர மேன்மை நோக்கி BMICH பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதன் காரணமாகவே BMICH இவ் விருதினை வென்றெடுத்தது. தமது நிறுவனத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் தரத்திற்கு முன்னுரிமையளித்து நடைமுறைகளில் செயற்திறன் மற்றும் புத்தாக்கத்தை பின்பற்றிவரும் உலகம் முழுவதுமுள்ள நிறுவனங்களுக்கு BID மூலம் இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த வருடம் வெற்றியடைந்த நிறுவனங்களுள் அடங்குபவன 1986 முதல் ஐரோப்பாவிலும் 1994 முதல் துருக்கியிலும் AERIUM - CEFIC TURKEY  நிறுவனம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. 

CEFIC, அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் முதலீடு அபிவிருத்தி, குத்தகை (LEE - SSSING),சொத்து மற்றும் வசதி மேலாண்மை மற்றும் சொப்பிங் நிலையங்கள் மற்றும் வர்த்தக கட்டிடங்களில் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆகிய நடவடிக்கைளின் போது ஆலோசனை நிறுவனமாக செயலாற்றி வருகிறது. துருக்கியில் 20 வருடகாலமும் ஐரோப்பாவில் 28 வருடகாலமும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

மொங்கொலியா நாட்டிலுள்ள Mergevan LLC நிறுவனமானது Rosneft உடன் இணைந்து மொங்கொலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கிடையே உருவாக்கப்பட்டது. 

சிவில் விமான போக்குவரத்துக்களுக்காக 6,000 m3 (CUBIC METERS) ஜெட் எரிபொருள் கிடங்கு வசதியுடன் ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் கிடங்குகளுக்கான (DEPAUSE) உயர் தரமான எரிபொருள் வழங்கல் மற்றும் எண்ணெய் ஏற்றல் மற்றும் இறக்கல் போன்றவற்றில் விசேடத்துவத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளது. பெரும்பான்மையாக ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஒருங்கிணைந்த எண்ணெய் நிறுவனமாக Rosneft உள்ளது.

கானாவில் உள்ள  Breast Care International (BCI)நிறுவனம் 2002 ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. கானா பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையிலும் குறிப்பாக கிராமிய பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வும் பரிசோதனைகள் நோய்கள், ஆலோசனைகள் சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு போன்றவற்றையும் வழங்குவதுடன் குறிப்பாக மார்பக புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமாக BCI செயற்பட்டு வருகிறது.

ஜெனீவா விருதுகள் விழாவில் வெற்றியீட்டிய அனைத்து நிறுவனங்களும் இன்றைய மாற்றமடைந்து வரும் வர்த்தக சூழலில் ஏனைய நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழும் QC100 TQM மாதிரியை பின்பற்றுவதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள நிறுவனங்களாகும். 

BID விருதை வென்ற நிறுவனங்கள் தமது தொழிற்துறையில் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளதுடன் தத்தமது நாட்டில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு வழங்கிய நிறுவனமாகும். புத்தாக்கம் மற்றும் சாதகமான வளர்ச்சி நோக்கைக் கொண்ட BMICH நிறுவனம் இதற்கு மிகச்சிறந்ததொரு உதாரணமாகும்.

இதற்கு முந்தைய BID விருது வென்ற நிறுவனங்களுள் Turner கட்டுமானம் (USA), Haki(சுவீடன்) Ansaldo Energy (இத்தாலி), Zepter(ஆஸ்திரியா), RAO-Unified Energy Systems (ரஷ்யா)Als & Cachou- TBWA(பிரான்ஸ்), Tata Group(இந்தியா), Plamex-Plantronics (ஐக்கிய அமெரிக்கா), Dogus Holding A.S(துருக்கி), Franklin Electric(ஐக்கிய அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ) ஐக்கிய இராச்சியத்தின் QMS International, FSUE VO "Safety" (ரஷ்யா) மற்றும் Viking Line (பின்லாந்து) போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த்...

2024-09-09 20:40:22
news-image

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க ரணில் வில்லத்தரகே...

2024-09-09 19:39:28
news-image

50 ஆண்டுகளை நிறைவு செய்யும் எய்ட்கன்...

2024-09-09 10:20:01
news-image

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும்...

2024-09-09 09:30:01
news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54
news-image

இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC)...

2024-09-06 09:46:27
news-image

குழந்தைப் பருவ விருத்தியில் பெரும் மாற்றத்திற்காக...

2024-08-29 19:34:33
news-image

கூட்டுறவு மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச்...

2024-08-27 14:20:30
news-image

அமானா வங்கி மற்றும் Prime குரூப்...

2024-08-26 15:21:48
news-image

2024\25இன் முதலாவது காலாண்டில் வலுவான செயற்றிறனைக்...

2024-08-20 21:41:17
news-image

இலங்கையின் முதலாவது நவீன இல்லத் தொடர்மனை...

2024-08-20 15:28:49
news-image

தேயிலை ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னணி வகிக்கும்...

2024-08-26 14:41:55