மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையிலுள்ள மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு 50 மில்லியன் ரூபா செலவில் ஒரு கட்டிடம் ஒன்றை நிர்மானித்து தருவதாகவும், இந்த வைத்தியசாலையினை எதிர் காலத்தில் தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும், வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பாலித மஹிபால தெரிவித்தார்.

இவ் வைத்தியசாலையின் பல் வேறு பகுதிகளையும் பணிப்பாளர் நாயகம் வைத்தியசாலையின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் நோயாளர் வரவு பதிவேட்டையும் பார்வையிட்டார்.