AIA ஹொங்கொங் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் இருந்து தனது பங்குகளை நீக்குவதற்காக நீக்கல் விலை ஏற்றுக்கொள்ளல் செயல்முறையைத் திறந்துள்ளதுடன் பங்குதாரர்கள் மற்றும் SEC ஆகியவற்றின் அனுமதிகளையும் பெற்றுள்ளது.

பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனமான AIA இன்சுரன்ஸ் லங்கா பிஎல்சி (“AIA இன்சுரன்ஸ் லங்கா” அல்லது“நிறுவனம்”) இலங்கைக் காப்புறுதிச் சந்தைக்கான இதனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே நேரத்தில் ஏற்புடைய ஒழுங்கு முறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் (“CSE”) உத்தியோகபூர்வப் பட்டியலில் இருந்து நிறுவனத்தினுடைய பங்குகளை நீக்குவதாகவும்

அறிவித்திருந்தது. நிறுவனத்தின் பங்குகளை நீக்குவதற்கான முன்மொழிவானது 27 மார்ச் 2019ம் திகதி இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில்  (“EGM”) அவசியமான பங்குதாரர்களின் பெரும்பான்மையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

EGM  இன் போது வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கிணங்க நிறுவனத்தினுடைய பங்குகளை நீக்குவதற்கான ஒப்புதலுக்காக இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (“SEC”) AIA  இன்சுரன்ஸ் லங்கா தனது உத்தியோகபூர்வ விண்ணப்பத்தை வழங்கியிருந்தது. 

இது தொடர்பாக 2019 மே 10ம் திகதியின் நிறுவனத்தினுடைய அறிவித்தலுக்கு ஏற்ப நீக்கல் விலை ஆவணமானது ஹொங்கொங்கின் AIA  கம்பனி லிமிடட் (“விலை தீர்மானிப்பாளர்”) இனால் பங்கு ஒன்றின் விலை இலங்கை ரூபா இரண்டாயிரத்து ஐந்நூறு (ரூபா 2500/-) எனும் நீக்கல் விலையில் நிறுவனத்தின் மீதமுள்ள பங்குதாரர்களின் பங்குகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நீக்கல் விலையையே கருதுகின்றது. மேலும் முழுமையாகச் செலுத்தப்பட்ட சாதாரண பங்குகள் நிறுவனத்தினுடைய பங்குதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நீக்கல் விலையானது 2019 மே 24, வெள்ளியில் (“ஆரம்பிக்கும் திகதி”) இருந்து 2019 ஜுன் 21,வெள்ளி மாலை 4.30 (“முடிவுத் திகதி”) வரை 20 வியாபார நாட்களுக்காகத் திறந்திருக்கும். நீக்கல் விலை

ஆவணத்தில் குறிப்பிடப்படுகின்றவாறான நீக்கல் விலையின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீக்கல் விலையினை ஏற்றுக்கொள்கின்ற பங்குதாரர்களுக்கு விலை தீர்மானிப்பாளரினால் கொடுப்பனவுகள் அனுப்பி வைக்கப்படும்.

AIA இன்சுரன்ஸ் லங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி பங்கச் பெனர்ஜி கருத்துத் தெரிவிக்கையில் “விலை தீர்மானிப்பாளரினால் பங்கு ஒன்றிற்கு ரூபா. 2,500 என நிர்ணயிக்கப்பட்ட மிகவும் நியாயமான நீக்கல் விலையினை ஏற்றுக்கொள்வதில் எங்களுடைய பங்குதாரர்கள் மிகவும் ஈடுபாடுகாட்டியிருந்தனர். 

விலை தீர்மானிப்பாளராக எங்களுக்கு அவர்கள் இதுவரை வழங்கிய ஆதரவிற்கும் பொறுமைக்கும் அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியைத் தெரிவிப்பதோடு, AIA  இன்சுரன்ஸ் மீதமுள்ள நடைமுறைகளையும் ஒருங்கிணைக்கும்” எனத் தெரிவித்தார்.

நிறுவனத்தின் சட்டப் பணிப்பாளர் பிரதான சட்ட அதிகாரி சத்துரி முனவீர விலை ஏற்றுக்கொள்ளல் செயல்முறையைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “விரைவான ஏற்றுக்கொள்ளல் மற்றும் நிதி பரிமாற்றல் செயல்முறையை எளிதாக்குவதற்கு, விலை தீர்மானிப்பாளர் இரண்டு வெவ்வேறு கொடுப்பனவு இடைவெளிகளை வழங்கியிருக்கிறார். 

அதாவது (எவ்வாறாயினும் மே 24 இலிருந்து ஜுன் 21 வரை நீக்கல் விலை திறந்திருக்கும்) 2019 ஜுன் 07ம் திகதியில் செல்லுபடியான விலை ஏற்றுக்கொள்ளல் படிவங்களைக் கையளித்தால்,2019 ஜுன் 21 என்ற உத்தியோகபூர்வ முடிவுத் திகதி வரை காத்திராமல் ஜுன் 7ம் திகதியிலிருந்து 15 வணிக நாட்களினுள் விற்கப்படுகின்ற பங்குகளுக்காக அவர்களுடைய பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.

CSE இலிருந்து தனது பங்குகளை நீக்குவதற்கான இத்தீர்மானமானது ஒரேயொரு பொதுப்பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கும் தாய் நிறுவனத்துடன் இணைந்த முழுமையாகச் சொந்தமாக்கப்பட்ட துணை நிறுவனங்களாகவுள்ள இதனது வியாபார அலகுகளின் செயற்பாட்டிற்காக AIAகுழுமத்தின் விருப்பமான இலக்குச் செயற்பாட்டு மாதிரியின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

 இலங்கைக்கு இதனது நுழைவு காரணமாக CSE  இலிருந்து AIA இன்சுரன்ஸ் லங்காவினை நீக்குவதற்கான தனது நோக்கத்தை AIA குழுமம் வெளிப்படுத்தியிருந்தது.

இச்செயல்முறையின் பகுதி ஒன்றாக AIA  இன்வுரன்ஸ் லங்காவானது, இலங்கைக் காப்புறுதிச் சட்டம் 2017 இற்கு ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களுக்கு இணங்கவே பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் விதிவிலக்காக ஹொங்கொங் லிமிடட்டின் பங்கு பரிவர்த்தனையில் AIA குழும லிமிடட்டினது மிகச்சிறந்த தாய் நிறுவனப் பட்டியலின் அடிப்படையில் பங்கு பரிவர்த்தனையில் பட்டியலிடப்படுவதற்கான தேவைக்காக இலங்கைக் காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (“IRCSL”) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயுள் காப்புறுதி வணிகத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான “IRCSL” இனால்

வழங்கப்பட்டுள்ள AIA  இன்சுரன்ஸ் லங்காவினுடைய உரிமமானது நிறுவனத்தின் நீக்கல் செயற்பாட்டினால் பாதிப்படையாது. 

மேலும் இவ்வியாபாரம் “IRCSL”  இனால் தொடர்ச்சியாக மேற்பார்வையும் செய்யப்படும். காப்புறுதிதாரர்களின் பொறுப்புக்கள் இதனால் பாதிப்படையாது மேலும் AIA இன்சுரன்ஸ் லங்கா தனது வாடிக்கையாளர்களின் பொறுப்புக்களுக்கு தொடர்ச்சியாக மதிப்பளிக்கும்.