உண்மையிலேயே இலங்கை மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள்தான். அதிலும் பல காலம் வரி செலுத்திவருபவர்கள் இதில் முதலிடம் பிடிக்கின்றனர். காரணம் என்னவென்றால் இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தும் மிகவும் அதிகப்படியான வரி அறவீடுமுறை காணப்படுவதேயாகும்.

 

இவ்வாறான வரிகள் பற்றி நம்மில் சிலர் அறிந்திருந்தாலும் பலர் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர்.

அவர்களுக்காக, தற்போது நடைமுறையிலுள்ள முக்கியமான வரிகளாவன...

 • வருமான வரி (Income Tax)

 • கூட்டிணைவு வருமான வரி (Corporate Income Tax)

 • பங்குடைமை வரி (Partnership Income Tax)

 • தனி நபர் வருமான வரி (Individual Income Tax)

 • பங்குலாப வரி (Dividend Tax)

 • பொருளாதார சேவைக் கட்டணம் (Economic Service Charges)

 • பெறுமதி சேர் வரி (Value Added Tax)

 • இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (Simplified Value Added Tax)

 • நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (Nation Building Tax)

 • உழைக்கும் போது செலுத்தும் வரி (Pay As You Earn Tax)

 • நிறுத்திவைத்தல் வரி (Withholding Tax)

 • மூலதன ஈட்டுகை வரி (Capital Gain Tax)

 • முத்திரைத் தீர்வை (Stamp Duty)

 • பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (Betting and Gaming Levy)

 • சுற்றுலா அபிவிருத்தி கட்டணம் (Tourist Board Development Levy)

போன்றவை முக்கியமாகக் குறிப்பிடத்தக்கன.

என்ன? வாசித்தே களைத்துவிட்டீர்களா?. வாசித்தே களைப்படையுமாயின் தொடர்ந்து பலகாலம் வரி செலுத்திவருபவர்களுக்கு எவ்வாறு இருக்கும்?. உண்மையிலேயே ஒரு நரக வேதனையே. ஆம், வரி செலுத்துபவர்கள் முன்வைக்கும் முக்கிய முறைப்பாடு யாதெனில் “ வரி செலுத்துபவர்களுக்கே தொடர்ந்தும் பிரச்சினை வருகின்றது” என்பதேயாகும்.

Too much of anything is too Bad. எனவே இலங்கை அரசாங்கமும் அதன் திட்டமிடும் குழுவும் நாட்டினதும் மக்களினதும் நலன்கருதி ஒருசில நடைமுறை மற்றும் சிக்கலற்ற வரிமுறைகளினை அமுல்ப்படுத்துவதன் மூலம் நாட்டினை சிறந்த முறையினில் வளர்ச்சியடையச் செய்யமுடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 

எவ்வாறு நுளம்பானது தனக்கு தேவையான இரத்தத்தினை மனிதனிடம் எடுக்கின்றதோ அவ்வாறு வரிக்கொள்கைகளையும் அமைத்தோமேயானால், சிறந்த ஒரு பொருளாதார முன்னேற்றத்தினை எம் நாட்டிற்கு அமைத்துக்கொள்ளமுடியும்.

- A.G.S. சுவாமிநாதன் சர்மா

( பட்டயக்கணக்காளர், வரி ஆலோசகர், முகாமைத்துவ ஆலோசகர் மற்றும் மிருதங்க இசை கலைஞர் )