ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் தங்களது பரந்துபட்ட கிளை வலையமைப்பை விஸ்தரிக்கும் நோக்கில் கொட்டாவையில் புதிய கிளையொன்றினை ஆரம்பித்தது.

இக்கிளையானது இல 125/10,முதலாம் மாடி, வைஹலெவல் வீதி, கொட்டாவை என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளதோடு கொட்டாவை பிரதேசத்து வாடிக்கையாளர்களுக்கு தங்களது சகல காப்புறுதி நடவடிக்கைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிகழ்விற்கு ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.விமலேந்திரராஜா, பிரதான நிறைவேற்று பணிப்பாளர் சந்தன எல் அளுத்கம, முகாமைத்துவ குழாமினர்,நிறுவன ஊழியர்கள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். 1962ஆம் ஆண்டு தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்த ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் நம் நாட்டிலுள்ள பாரிய அரச காப்புறுதி நிறுவனமாகும்.தற்பொழுது 197 பில்லியன் பெறுமதி மிக்க சொத்துக்களையும் 105 பில்லியனுக்கும் அதிகமான ஆயுள் காப்புறுதி நிதிகளைக் கொண்ட ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் இந்நாட்டிலுள்ள நிலையான காப்புறுதி நிறுவனமாகும். 

அதைப்போலவே நாட்டின் முன்னணி காப்புறுதி நிறுவனமாவதுடன் யுயூ பிட்ச் தரநிலைப்படுத்தலைக் கொண்டுள்ள ஒரேயொரு உள்நாட்டு காப்புறுதி நிறுவனமாகும்.