யாழ்ப்பாணம், அராலி வடக்கு, இலந்தைத் தாழ்வு அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம்  எதிர்வரும் வியாழக்கிழமை (06.06.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மகோற்சவ விழா எதிர்வரும் சனிக்கிழமை (15.06.2019) வரை பத்து தினங்களுக்கு நடைபெறும்.

அத்தினங்களில் மெய்யடியார்கள் எம்பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்று ஆசிபெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.

இன்று (05.06.2019 ) புதன்கிழமை மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, கிராமசாந்தி,வாஸத்து சாந்தி ஆகியன இடம்பெறும். நாளை வியாழக்கிழமை (06.06.2019) காலை 11.00 மணி  கொடியேற்றம் இடம்பெறும்.

எதிர்வரும் 13 ஆம் திகதி  யாழக்கிழமை மாலை 07.00 மணிக்கு சப்பறத்திருவிழா இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07.00மணி தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது.

இதேவைளை, எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை  காலை 10.30 மணிக்கு தீர்த்தத் திருவிழா இடம்பெற்று இரவு 7.00 மணிக்கு கொடியிறக்கம் இடம்பெறும்.

மாறுநாள் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிமுதல் பூங்காவனம் இடம்பெறுமென ஆலய நிர்வாக சபையினர் அறிவித்துள்ளனர்.