(செய்திப்பிரிவு)

மஹாநாயக்க தேரர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர்களான மங்கள சமரவீர , ராஜித சேனாரத்ன மற்றும் பாரளுமன்ற உறுபம்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரை கம்பஹா மாவட்ட விகாரைகளுக்குள் அனுமதிக்க கூடாது என்று கம்பஹா பௌத்தசாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதி சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கம்பஹக சாம மகா விகாரையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைப்பெற்ற சந்திப்பின் போது பௌத்தசாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதி சங்கத்தினால் இந்த தீர்மானம்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.  இதன்போது கம்பஹா  மாவட்ட பௌத்தசாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதி சங்கத்தின் செயலாளர் தோரபிடியே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.  

 

குறித்த அரசியல்வாதிகள் மூவரும் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள எந்தவொரு விகாரைகளுக்கும் மதம் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக் அழைப்பிக்க வேண்டாம். இந்த தீர்மானமானது எதிர்வரும் காலங்களில் நாட்டில் உள்ள ஏனைய அனைத்து விகாரைகளிலும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாட்டின் சகல மக்களையும் கருத்தில் கொண்டு  சகலராலும்  ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சட்டம் ஒன்று எதிர் காலங்களில்  உருவாக்கப்பட வேண்டும் என  குறிப்பிட்டுள்ளார்.