(நா.தினுஷா)  

ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள்  அமைச்சு பதவிகளை  துறந்துள்ளார்களே தவிற, அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.  

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு  எதிராக முன்வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

ஆகவே  நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின் போது  அரசாங்கதின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம்.  இந்த பிரேரணை அரசாங்கத்துக்கே சாதகமாக அமையும். பதவி விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவே செயற்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.