தேசிய நல்லிணக்கத்தைப் பயன்படுத்தி அரசியல் தேவையை பூர்த்தி செய்துள்ளார் ரணில் - கெஹலிய

Published By: Daya

05 Jun, 2019 | 03:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய நல்லிணக்கம் என்ற  சொற்பதத்தை பயன்படுத்தி முஸ்லிம் - சிங்கள  இனங்களுக்கிடையில்  ஒரு  உறுதியான வெறுப்பு நிலையினை தனது அரசியல் தேவைக்காக பிரதமர் ரணில்  விக்ரமசிங்க ஏற்படுத்தி விட்டார். இதன் விளைவு எதிர்காலத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் . நாட்டின் தேசிய  பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து  ஒரு  தரப்பினரது ஆதரவை பெற்றுக் கொள்ள  அரசாங்கம் முயற்சித்தமையின் வெளிப்பாட்டை தெளிவாக  காணமுடிகின்றது  என  பாராளுமன்ற உறுப்பினர்  கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரையும் பதவி விலகுமாறு எதிர் தரப்பினர் ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இவர்கள் பதவி விலகியது அவர்களது  தனிப்பட்ட விருப்பமாகும்.  இவர்களின் செயற்பாட்டின் ஊடாக   நாட்டு  மக்களுக்கு ஒரு  செய்தியினை  தெளிவான வழங்கியுள்ளார்கள். அதாவது  குற்றஞ்சாட்டப்படுபவர்  பயங்கரவாதியாக இருந்தாலும்  பரவாயில்லை  அவர்  என்  இனம்  ஆகையால்  நாம் பாதுகாக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மறுபுறம்  எதிர்தரப்பினர் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிராக செயற்படுகின்றார்கள் என்ற தவறான    கருத்தினையும்  சிறுபான்மை மக்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தனது அரசியல்  இராஜதந்திரத்தினால் அழகுற பதிவிட்டு விட்டார்.  எதிர்தரப்பினர் முன்னாள் அமைச்சர்  ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக  நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவாக விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருந்தால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்காது. முறையான ஒரு தீர்வை எட்டிருக்கலாம்.  ஒரு தனிநபரை பாதுகாப்பதற்காக அரசாங்கம் இன்று நாட்டை  காட்டிக் கொடுத்து விட்டது என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41