ஆழிப் பேரலையில் கோரத்தாண்டவம் ஆடி பல உயிர்களை காவுகொண்ட மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய எண்ணெய்க் காப்பு நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழா நாளை நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடியவர்கள் அம்பாளுக்கு எண்ணெக் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது.

கடல் நாச்சி அம்மனுக்கு எண்ணெய் சாத்துவதற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சர்வதேச நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு எண்ணெய் சாத்தி வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, அம்பாளுக்கு எண்ணெய்க் காப்பு சாத்துவதுடன் நடைபெறவுள்ள அம்பாளின் மகாகும்பாபிஷேக நிகழ்வுகளிலும் ஆசார சீலர்களாக வருகை தந்து அம்பாளின் இஷ்ட சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் பக்த அடியவர்களை அன்போடு அழைக்கின்றார்கள் ஆலயபரிபாலன  தர்மகத்தா சபையினர்.