மஞ்சள் கடவையில் பாதையைக் கடந்த இருமாணவிகள், பாடசாலை ஆய்வு கூட பெண் ஊழியர் ஆகியோரை மோதிச் சென்ற லொறியை மொனராகலை பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருப்பதுடன்  சாரதியும் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை மொனராகலை எதிலிவெவ என்ற இடத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எதிலிவெவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இருமாணவிகளும், அதே பாடசாலையின் ஆய்வுகூட பெண் ஊழியருமே இவ்வாறு லொறியினால் மோதுண்டு படுகாயங்களுடன் மொனராகலை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட லொறி சாரதியை மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.