தமிழ்த்தலைவர்களில் ஒருவரான முன்னாள் இலங்கை பாராளுமன்ற உப சபாநாயகரும் உடுப்பிட்டி நல்லூர் தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் ம .சிவசிதம்பரத்தின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று புதன்கிழமை நெல்லியடியில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு முன்பாக உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவரும் அதிபருமான இ.இராகவன்  தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒன்றியத்தின் போசகர் செல்வன்னா பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

ஆன்னாரின் உருவச்சிலைக்கு முன்னால் யாழ்.மாவட்ட பாராளுமன்ற மகாணசபை உறுப்பினரான எம். கே. சிவாஜிலிங்கம் முதலாவதாக மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் கரவெட்டி பிரதேசசபை தலைவர் த.ஜங்கரன வலிகிழக்கு பிரதேசசபை தலைவர் வி .நிரோசன்  கரவெட்டி பிரதேசபை உறுப்பினர் பரஞ்சோதி வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கோ. கருணாநந்த மூர்த்தி கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய உறுப்பினர் வீ.வீரசிங்கம் போசகர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன்  ஆகியோர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள் தொடர்ந்து திரண்டிருந்த பொது மக்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.