ஜனாதிபதி உடைய எண்ணக்கருவில் உருவாகிய நாட்டுக்காக ஒன்றினைவோம் வேலைத்திட்டத்தில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன.

அந்த வகையில் நாட்டுக்காக ஒன்றினைவோம் வேலைத்திட்டத்தில்  ஒரு அங்கமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான  உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்  சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி வழங்கும்  நிகழ்வும் நேற்று மதியம் ஒரு மணிக்கு இடம்பெற்றது

ஒட்டுசுட்டான் பிரதேச சமூக சேவைகள்  உத்தியோகத்தர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் உடைய மேலதிக செயலாளர் ரோஹன அபேரத்ன ஜனாதிபதி செயலகத்தின்   உதவிச் செயலாளர் லலித்  பண்டார முல்லைத்தீவு மாவட்டத்தின்   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உடைய அமைப்பாளரும்  பிரதேச சபை உறுப்பினருமாகிய சத்தியசுதர்ஷன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த. அகிலன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தனர்

இதன்போது மாற்றுவலுவுள்ளோர்களுக்கான சக்கர நாற்காலிகள் கட்டில்கள் காது கேட்காதவர்களுக்கான இயந்திர பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீர் சுத்திகரிப்பதற்கான தொகுதியும் வழங்கிவைக்கப்பட்டது

இதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் யாழ் பல்கலைக்கழகத்தின் உடைய ஊடக கற்கை நெறிகளுக்கான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி. ரகுராம் அவர்கள் கலந்துகொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விளக்கங்களை அளித்தார்.