மீறியபெத்தை தமிழ் வித்தியாலயத்தில் காட்டு யானைகள் புகுந்து வித்தியாலய அலுவலக அறையினையும்,மலசலக்கூட தொகுதியையும் தாக்கி பலத்த சேதமாக்கியுள்ளன.

இது குறித்து பாடசாலை அதிபர் பண்டாரவளைக் கல்விப் பணிப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்.

இரவு வேளைகளில் குறித்த காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் வித்தியாலய அலுவலக அறை பலத்த சேதத்திற்குள்ளாகியிருப்பதால் பெறுமதியாக்கக் கோவைகள் மற்றும் பொருட்கள் அழிக்கப்பட்டிருப்பதாக வித்தியாலய அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் குறித்த பகுதிக்குள் பிரவேசித்த காட்டு யானைகள்  ஒருவரைத் தாக்கியுள்ளது. இந்நிலையில் தாக்கப்பட்ட குறித்த  நபர் உயிரிழந்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.